என்னது மீண்டும் ட்விட்டர் வந்துட்டாரா வடிவேலு.. வைரலாகும் ஃபேக் ஐடி.. ரஜினியை கலாய்த்து ட்வீட்?

சென்னை: வைகைப்புயல் வடிவேலு பேரில் ஃபேக் ஐடி ஒன்று, நேற்று இரவில் இருந்து வைரலாகி வருகிறது.

Recommended Video

Vadivelu Opinion on Rajini Politics | Rajinikanth | Cheif Minister

மீண்டும் தான் ட்விட்டருக்கு வந்துள்ளதாகவும், பழைய ஐடி செயல் இழந்து போனதாகவும் வடிவேலு பேசும் வீடியோவுடன் வந்துள்ள இந்த ஃபேக் ஐடியை ரசிகர்கள் நிஜ ஐடி என நம்பி, 600க்கும் மேல் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், அந்த ட்வீட்டில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா பெயர்களும் டேக் செய்யப்பட்டிருக்கிறது.

இதுதான் அந்த ட்வீட்

"பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம். என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய் விட்டது. அதனால் #ரஜினி ஐ போல் திரும்பி வந்துட்ட சொல்லு.. #PrayForNesamani ஆ அட பாவீங்களா!! சரி நன்றி ப்ரெண்ட்ஸ் #விஜய் #சூர்யா. என்றும் #அஜித் ஐ மறக்க மாட்டேன்" வடிவேலுவே நம்பும்படி ஒரு ட்வீட்டை போட்டுள்ளனர்.

பழைய வீடியோ

பழைய வீடியோ

வெறும் அந்த ட்வீட்டை மட்டும் போட்டிருந்தால் கூட ரசிகர்களை போல பலரும் நம்பி ஏமாந்து போயிருப்பார்கள். போக்கிரி படத்தில் வருவது போல, புது கெட்டப் போட்டாலும், மண்டை மேல் இருக்கிற கொண்டையை கவனிக்கலையே பாஸ் என்பது போல, தெனாலிராமன் பட கெட்டப்போடு பேசிய வீடியோவை போட்டு, இது ஃபேக் ஐடி தான் என உறுதிபடுத்தி விட்டனர்.

ரஜினி கலாய்

சமீபத்தில் சென்னை லீலா பேலசில் நடைபெற்ற ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து நடிகர் வடிவேலுவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். திருச்செந்தூர் முருகனை தரிசித்து விட்டு வந்த வடிவேலு, நான் தான் அடுத்த சி.எம் என பங்கம் பண்ணிய நிலையில், தற்போது, ரஜினியை போல திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என இந்த ட்வீட்டில் வேண்டுமென்றே பதிவிட்டுள்ளனர்.

ஏமாந்த ரசிகர்கள்

தனது நகைச்சுவையால் ஏகப்பட்ட ரசிகர்களை குவித்துள்ள நடிகர் வடிவேலு, மீம்ஸ் உலகின் முடிசூடா மன்னனாக இருக்கிறார். மீண்டும் தான் ட்விட்டருக்கு வந்துவிட்டதாக வெளியான பதிவால், வைகைப் புயலின் ரசிகர்கள் வரிசையாக வந்து வா தலைவா என்றும், தலைவன் வந்துட்டான் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேக் ஐடி

தெனாலி ராமன் படத்தின் போது எடுத்த வீடியோவை போட்டு, தான் ட்விட்டருக்கு வந்துள்ளதை நடிகர் வடிவேல் சொல்வது போல் இருக்கும் வீடியோவை பார்த்த சில அறிவாளி ரசிகர்கள், இது ஃபேக் ஐடி என்றும், போலிகளை கண்டு ஏமாறாதீர்கள், நிஜ தலைவன் வடிவேலு, ட்விட்டர் உள்ளிட்ட எந்தவொரு சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இல்லை என பதிவிட்டு வருகின்றனர்.

எதற்காக

எதற்காக

இப்படி பிரபல நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர் கொண்ட ஃபேக் ஐடிக்களை உருவாக்கி விஷமத்தனமான கருத்துக்களையும், சர்ச்சைகளையும் சில நெட்டிசன்கள் வேண்டுமென்றே கிளப்பி, அந்த சந்தோஷத்தில் குளிர் காய்கின்றனர். நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகள் பெயரிலும் இதுபோன்ற ஃபேக் ஐடி ஆசாமிகளின் தொல்லை அதிகரித்துக் கொண்டே போகிறது. சில பிரபலங்களுக்கு ப்ளூ டிக் வழங்கப்படாத நிலையில், அவர்களின் ரியல் ஐடிக்களும், ஃபேக் ஐடிக்கள் என்று எண்ணும் நிலைக்கும் ரசிகர்கள் தள்ளப்படுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X