ரியல் ‘Contractor நேசமணி’ வடிவேலு தான்.. யோகி பாபு, ஓவியா டைட்டிலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!

சென்னை: யோகி பாபு மற்றும் ஓவியா இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'Contractor நேசமணி' என வடிவேலுவின் கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்துள்ளனர்.

அந்த படத்தின் பூஜை இன்று காலை 9 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் நடைபெற்றுள்ளது.

'நாய் சேகர்' டைட்டிலை தொடர்ந்து 'Contractor நேசமணி' டைட்டிலிலும் மற்ற காமெடி நடிகர்கள் படம் நடிப்பதால் வடிவேலு ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

டைட்டிலாகும் வடிவேலு கதாபாத்திரங்கள்

டைட்டிலாகும் வடிவேலு கதாபாத்திரங்கள்

நாய்சேகர், கான்ட்ராக்டர் நேசமணி, தீப்பொறி திருமுகம், வக்கீல் வண்டுமுருகன், சங்கிமங்கி, டெலக்ஸ் பாண்டியன், செட்டப் செல்லப்பா, இசக்கி, படித்துறை பாண்டி, முருகேசா, ஏட்டு ஏகாம்பரம், கைப்புள்ள என ஏகப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார் தற்போது அவர் நடித்து பிரபலமான கதாபாத்திரங்கள் பட டைட்டில்களாக மாறி வருகின்றன.

சதீஷின் நாய் சேகர்

சதீஷின் நாய் சேகர்

மீண்டும் நடிக்க வந்த வடிவேலு நாய் சேகர் டைட்டிலில் நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் உருவாகி வரும் சதீஷின் படத்திற்கு அந்த டைட்டில் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வடிவேலுவும் அந்த டைட்டில் வேண்டும் என போராடிய நிலையில், அது கிடைக்காமல் போக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் எனும் தலைப்பில் வடிவேலு நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வேறு ஒரு புதிய டைட்டிலும் வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Contractor நேசமணி

Contractor நேசமணி

நாய் சேகர் டைட்டிலில் சதீஷ் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக Contractor நேசமணி டைட்டிலில் நடிகர் யோகி பாபு நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை இன்று கோலாகலமாக போடப்பட்டுள்ளது. இயக்குநர் ஸ்வதீஷ் இந்த படத்தை இயக்குகிறார். நடிகை ஓவியா யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஓவியா தான் ஜோடி

ஓவியா தான் ஜோடி

சில தினங்களுக்கு முன்பாகவே நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று புதிய படத்தின் பூஜை நடைபெற உள்ளதாகவும் யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கப் போவதாகவும் அறிவித்தார். மேலும், அந்த படத்தின் டைட்டில் Contractor நேசமணி என்கிற அறிவிப்பை நடிகை ஓவியா வெளியிட ஏகப்பட்ட வடிவேலு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒரிஜினல் வடிவேலு தான்

ஒரிஜினல் வடிவேலு தான்

"வடிவேலு தான் ஒரிஜினல் 'கான்ட்ராக்டர் நேசமணி' என பிரண்ட்ஸ் படத்தின் ஜிஃப் இமேஜை பதிவிட்டு வடிவேலு ரசிகர்கள் யோகி பாபு மற்றும் ஓவியாவின் புதிய படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ராயல்டி கேட்கப் போறாரு

ராயல்டி கேட்கப் போறாரு

"எல்லாம் தலைவன் வடிவேலு டயலாக்.. என்னைக்கு கடுப்பாகி எல்லார் மேலயும் ராயல்டி கேட்டு கேஸ் போடப் போறாருன்னு தெரியல" என வடிவேலு ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

ACTOR MADAN BOB CHAT | I LIKE TO ACT AS A VILLAIN | V-CONNECT | Filmibeat Tamil
மணி ஹெய்ஸ்ட் பாதி ஸ்பைடர்மேன் பாதி

மணி ஹெய்ஸ்ட் பாதி ஸ்பைடர்மேன் பாதி

கான்ட்ராக்டர் நேசமணி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் மணி ஹெய்ஸ்ட் பாதி முகமாகவும் மீதி பாதி ஸ்பைடர் மேன் முகமாகவும் வடிவமைப்பட்டதை பார்த்த ரசிகர்கள், மணி ஹெய்ஸ்ட், ஸ்பைடர்மேன், பிரண்ட்ஸ் இன்னும் எத்தனை படங்கள் காப்பி அடித்து இந்த படம் உருவாகப் போகுதோன்னு என கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X