சக நடிகர்கள் செய்த ரூ. 7 கோடி மோசடி-கமிஷனரிடம் வடிவேலு புகார்

நடிகர் வடிவேலுவுடன் நடிக்கும் சில துணை நடிகர்கள் நிலம் வாங்கிக் கொடுத்தது தொடர்பாக ரூ. 7 கோடிப் பணத்தை மோசடி செய்து விட்டதாக சமீபத்தில் பரபரப்பு புகார் எழுந்தது.
சுடுகாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் உள்பட பல மோசடியான இடங்களை போலி பத்திரங்கள் மூலம் இவர்கள் வடிவேலுவுக்கு வாங்கி்க் கொடுத்து மோசடி செய்து விட்டதாக வடிவேலு கண்ணீர் மல்கக் கூறியிருந்தார்.
விரைவில் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுப்பேன் என்றும் வடிவேலு கூறியிருந்தார்.
போலிப் பத்திரங்கள் மூலம் வடிவேலு ஏமாந்த கதை, சமீபத்தில் அவருடைய வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போதுதான் அவருக்கே தெரிய வந்ததாம்.
இந்த நிலையில் இன்று மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து வடிவேலு புகார் கொடுத்தார். அதில், போலி நில பத்திரம் மூலம் என்னிடம் 7 கோடி மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவட வேண்டும் என்று கோரியுள்ளார் வடிவேலு.
வடிவேலுடன் பல காலமாக உடன் நடிக்கும் ஒரு முக்கியத் துணை நடிகர் மீதுதான் பலமான புகார் எழுந்துள்ளது. இவரது மகன் கூட சமீபத்தில் ஹீரோவானார். அவர் நடித்த முதல் படத்துக்குக் கூட வடிவேலு பண உதவி செய்து உதவியதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











