வரப் போறாருய்யா.. வரப் போராருய்யா.. வடிவேலு வரப் போறாருய்யா.. தூசி தட்டப்படும் 24ம் புலிகேசி!

சென்னை : முக பாவணைகள், கவுன்ட்டர் கொடுப்பது என தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக இருப்பவர் வடிவேலு. அவரது படங்களின் காமெடிகள் எவராலும் எளிதில் மறக்க முடியாததாக இருக்கும்.

தற்போது வரை மீம்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது வடிவேலுவின் காமெடி காட்சிகள் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்து வருகிறார் வடிவேலு. விரைவில் அவர் மீண்டும் நடிக்க வர வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

வடிவேலுவிற்கு ரெட் கார்டு

வடிவேலுவிற்கு ரெட் கார்டு

ஷங்கர் தயாரித்த இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தில் இருந்து வடிவேலு பாதியில் விலகினார். இதனால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடும் அளவிற்கு விவகாரம் பெரிசானது. அதற்கு பிறகு வடிவேலு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.

மீண்டும் வடிவேலு

மீண்டும் வடிவேலு

லேட்டஸ்ட் தகவலின் படி, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தின் மூலமே சினிமாவிற்கு திரும்பி வர வடிவேலு திட்டமிட்டுள்ளாராம். எந்த நேரத்திலும் மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்பட்டு, விரைவில் படம் முடிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Recommended Video

கண்ணீர் விட்டு அழுத வடிவேலு | Filmibeat Tamil
 களமிறங்கிய ஐசரி கணேஷ்

களமிறங்கிய ஐசரி கணேஷ்

ஷங்கருக்கும், வடிவேலுவுக்கும் இடையேயான பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேல் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேசன் களமிறங்கி உள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தைகளையும் அவர் துவக்கி உள்ளாராம்.

 விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இதனால் இம்சை அரசன் 23 ம் புலிகேசியை போல் 24 ம் புலிகேசி படமும் பிளாக்பஸ்டர் காமெடி என்டர்டெயின்மென்ட் படமாக அமையும் என நம்பப்படுகிறது. சிம்பு தேவன் இயக்கிய இம்சை அரசன் 23 ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமாக தான் 24 ம் புலிகேசி உருவாக உள்ளது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X