வடிவேலு வரவில்லைதான்.. கிங் காங் மகள் திருமணத்தில் அவர் வைத்த மொய் எத்தனை லட்சம் தெரியுமா?
சென்னை: வடிவேலு நடிப்பில் கடைசியாக வெளியான கேங்கர்ஸ் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்து வெளியாகவிருக்கும் மாரீசன் திரைப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை அந்தப் படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களிடம் இருக்கிறது. இந்நிலையில் வடிவேலு குறித்து நடிகர் கிங் காங் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் வைகை புயல் என்று கொண்டாடப்படுபவர் வடிவேலு. எந்த காமெடியாக இருந்தாலும் அதில் தன்னுடைய பெஸ்ட்டை கொடுத்து அனைவரையும் சிரிக்க வைக்கும் வல்லமை கொண்ட அவர்; இடையில் சில பிரச்னைகளை சந்தித்தார். அதன்காரணமாக சினிமாவிலிருந்து விலகியிருந்த அவர்; தனக்கான பிரச்னைகள் தீர்ந்ததை தொடர்ந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது.
மாமன்னனில் கம்பேக்: அந்தப் படத்துக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்தார். அப்படம் மெகா ஹிட்டாகி அவருக்கு தரமான கம்பேக்காக அமைந்தது. தொடர்ந்து நடித்த சந்திரமுகி 2, கேங்கர்ஸ் ஆகிய இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பைதான் பெற்றன. இப்போது அவர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் மாரீசன் படத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருடன் ஃபகத் பாசிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில்தான் ட்ரெய்லர் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது.

விடாத சர்ச்சைகள்: வடிவேலு மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்துவிட்டாலும் அவரை சுற்றி சர்ச்சைகள் எழுவது குறைந்தபாடில்லை. அதாவது முதலில் விவேக் மரணத்துக்கு நேரில் வரவில்லை என்று அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி தன்னுடன் நடித்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை எப்போதுமே வடிவேலு வளரவிட்டதே இல்லை; ராஜ்கிரணை மதிப்பதில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைகை புயல் மீது வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
கிங் காங் மகள் திருமணம்: சூழல் இப்படி இருக்க கிங் காங்கின் மகள் கீர்த்தனா திருமணம் சமீபத்தில் நடந்தது. வடிவேலுவுடன் ஏகப்பட்ட படங்களில் கிங் காங் நடித்திருக்கிறார். அதன் காரணமாக வடிவேலு கண்டிப்பாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இதனால் இந்த விஷயத்திலும் அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்கள்.
ஃபோனில் பேசிய வடிவேலு: இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு நடிகர் கிங் காங்கிடம் வடிவேலு ஃபோனில் பேசும்போது, "உங்கள் மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்ததே தமிழ்நாட்டிலிருந்து எட்டரை கோடி பேரும் வந்தது போன்றது. அத்தனை பேரும் வந்தாலும் உங்கள் வீடு தாங்குமா?..நீங்கள் பத்திரிகை வைத்தவர்கள் வரவில்லை என்று பலர் உசுப்பேத்துவார்கள். அதை நினைத்தெல்லாம் கவலைப்படாதீர்கள். அதான் முதலமைச்சரே வந்துவிட்டாரே என கூறியிருந்தார்.
கிங் காங் பேட்டி: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கிங் காங் அளித்த பேட்டியில், "வடிவேலு அவரது சொந்த ஊரில் குலதெய்வ கோயிலில் விசேஷம் என்பதால் அங்கு இருக்கிறார். அவரால் வரமுடியவில்லை. அதேசமயம் திருமணத்துக்கு அவரது மேனேஜர், மேக்கப் மேன் உள்ளிட்டோர் வந்தார்கள். கவரில் ஒரு லட்சம் ரூபாய்யை வடிவேலு கொடுத்துவிட்டிருந்தார். ஃபோனில் பேசும்போது, இது அனைத்துக்குமே உனது உழைப்புதான் காரணம். நல்லபடியா திருமணத்தை முடித்துவிட்டாய்" என கூறியதாக கிங் காங் கூறினார்.


Click it and Unblock the Notifications











