இளம் சீரியல் நடிகையை அள்ளி அணைத்து கொஞ்சும் வடிவேலு.. வேறலெவலில் டிரெண்டாகும் வீடியோ!
சென்னை: இளம் சீரியல் நடிகையை நகைச்சுவை நடிகர் வடிவேலு அள்ளி அணைத்து கொஞ்சும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
சமீபத்தில் வடிவேலுவுக்கு கொடுத்த டாக்டர் பட்டமே போலி என ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த பட்டம் செல்லுமா என வடிவேலு கொடுத்தவர்களிடமே வேடிக்கையாக கேட்ட வீடியோவும் அதிகம் பரவி வரும் நிலையில், இன்னொரு புதிய வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
மெளன ராகம் 2 மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை ரவீணா தாஹாவைத் தான் வடிவேலு அப்படி கொஞ்சுகிறார்.

4 வயது முதல்
ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் சன் டிவியில் வெளியான தங்கம் சீரியலில் 4 வயது சிறுமியாக சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர் ரவீணா தாஹா. வசந்தம், பவானி, சாந்தி நிலையம், வள்ளி, மல்லி, பைரவி, 63 நாயன்மார்கள், ராமானுஜர், பூவே பூச்சூடவா, சந்திரலேகா மற்றும் மெளன ராகம் 2 என பல சின்னத்திரை தொடர்களில் நடித்து அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார் ரவீணா தாஹா.

சினிமாவிலும்
சீரியலில் மட்டுமின்றி சினிமாவிலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். பொய் சொல்லப் போறோம், விஜய்யின் ஜில்லா, கண்ணக்கோல், ஜீவா, பூஜை, புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் மற்றும் ராட்சசன் உள்ளிட்ட பல பெரிய படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

டிடிஎஃப் வாசன் உடன் பைக் ரைடு
குழந்தை நட்சத்திரமாக இருந்த ரவீணா தாஹா தற்போது குமரியாகி உள்ள நிலையில், தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோக்களையும் நடனம் ஆடும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றி வருகிறார். சமீபத்தில் டிடிஎஃப் வாசன் உடன் இவர் சென்ற பைக் ரைடு வீடியோ வேறலெவலில் டிரெண்டானது.

வடிவேலுவை பார்த்ததும்
சமீபத்தில் வைகைப்புயல் வடிவேலுவை ரவீணா தாஹா சந்தித்த நிலையில், செம ஹேப்பி ஆகி உள்ளார். வடிவேலுவுடன் ரவீணா தாஹா எடுத்துக் கொண்ட க்யூட்டான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அள்ளி அணைத்து கொஞ்சும் வடிவேலு
குழந்தை நட்சத்திரமாக இருந்ததில் இருந்தே பல சினிமா பிரபலங்களின் செல்லப் பிள்ளையான ரவீணா தாஹாவை வடிவேலு பார்த்த நிலையில், அவரை அப்படியே அள்ளி அணைத்து கொஞ்சி உள்ளார். அந்த வீடியோவை ஷேர் செய்த ரவீணா, ஓ மை காட்.. என் கனவு நிறைவேறிவிட்டது போல உள்ளது என கேப்ஷன் போட ரசிகர்கள் இந்த க்யூட்டான மொமண்ட்டை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

ஷிவானியை தொடர்ந்து ரவீணாவா
முன்னதாக வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இளம் சின்னத்திரை நடிகை மற்றும் பிக் பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் நடித்திருந்தார். இந்நிலையில், ரவீணா தாஹா அடுத்த பட ஹீரோயினா என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

மாமன்னன் எப்போது
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அந்த படம் திரைக்கு எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். வடிவேலு மீண்டும் சினிமாவில் ரிட்டர்ன் ஆன நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் ஃபிளாப் ஆன நிலையில், மாமன்னன் படமாவது கைகொடுக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலு காமெடியில் கலக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











