வடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா?

By Siva

Recommended Video

வடிவேலுவிடம் ரூ. 9 கோடி நஷ்டஈடு கேட்கும் ஷங்கர்- வீடியோ

சென்னை: 24ம் புலிகேசி படப் பிரச்சனை தொடர்பாக வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிம்புத்தேவன் வடிவேலுவை வைத்து 24ம் புலிகேசி பட வேலையை துவங்கினார். படப்பிடிப்பு 10 நாட்கள் நடந்த நிலையில் சிம்புத்தேவன், வடிவேலு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து வடிவேலு படத்தை விட்டு வெளியேறினார்.

வடிவேலு திரும்பி வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்து ஒன்றும் நடக்காததால் ரூ. 6 கோடி செலவில் போடப்பட்ட செட் பிரிக்கப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் ஷங்கர் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்.

வடிவேலு

வடிவேலு

வடிவேலு 24ம் புலிகேசி படத்தில் நடிக்க வேண்டும் இல்லை என்றால் ரூ. 10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரூ. 10 கோடி கொடுப்பதற்கு நடித்துவிடலாம் என்று வடிவேலு முடிவு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஷங்கர்

ஷங்கர்

24ம் புலிகேசி படத்தின் தயாரிப்பாளர்களான ஷங்கர் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோர் தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகி வடிவேலு மீது மீண்டும் புகார் அளித்துள்ளனர். தங்களுக்கு உடனடியாக நஷ்டஈடு வாங்கித் தருமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வடிவேலு நஷ்டஈடு வழங்கும் வரை அவரை யாரும் வேறு எந்த படத்திலும் நடிக்க வைக்கக் கூடாது என்று தாயரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சுராஜ்

சுராஜ்

வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள இந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. சுராஜ் வடிவேலு படத்திற்கு ஆதரவு அளிக்கப் போவது இல்லை என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த இடியாப்ப சிக்கலில் இருந்து வடிவேலு எப்படி வெளியே வரப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 பிரச்சனை

பிரச்சனை

மீம்ஸுகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் வடிவேலு மீண்டும் நடிக்க வந்ததை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அந்த படத்திற்கும் பிரச்சனை வந்துவிட்டது. வடிவேலு திரும்பி வர வேண்டும், நம்மை மறுபடியும் வயிறு வலிக்க சிரிக்க வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா வடிவேலு?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X