Vadivelu - மாமன்னன் கொடுத்த உற்சாகம்.. இரண்டாவது இன்னிங்ஸில் சம்பளத்தை உயர்த்திய வடிவேலு?

சென்னை: Vadivelu Salary (வடிவேலு சம்பளம்) மாமன்னன் படம் கொடுத்த வெற்றியை அடுத்து வடிவேலு தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது.

நகைச்சுவையில் தவிர்க்க முடியாத நடிகர் வடிவேலு. அவர் வரும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரசிகர்கள் வெடித்து சிரிப்பார்கள். பிறரை உருவ கேலி செய்யாமல் தன்னை தானே கலாய்த்துக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பதில் வல்லவர். இதனாலேயே அவருக்கு ரசிகர் கூட்டம் பெருகுகிறது. பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்ற எந்த பாரபட்சமும் இல்லாமல் எல்லோருடனும் சேர்ந்து நடித்து அதகளம் செய்தார். காமெடி காட்சிகள் எல்லாம் எவர் க்ரீனாக இருக்கின்றன.

Vadivelu Increase his Salary After Maamannan Movie Success

பஞ்சாயத்து: வடிவேலுவின் கேரியர் உச்சத்தில் இருந்தபோது அரசியல் மேடையில் ஏறினார். அவர் என்று அரசியல் மேடை ஏறினாரோ அன்றிலிருந்து அவரது கேரியர் இறங்க ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் வடிவேலுவை வைத்து படம் எடுப்பதையே தயாரிப்பாளர்கள் தவிர்த்தனர். இதனால் திரைத்துறையிலிருந்து ஒதுங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார் வடிவேலு. அதுமட்டுமின்றி, இம்சை அரசன் 24ஆம் புலிகேசி பட பஞ்சாயத்தும் சேர்ந்துகொள்ள அவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.

படுதோல்வி: ஒருவழியாக வடிவேலுவுக்கு இருக்கும் பஞ்சாயத்துகள் பேசி சரி செய்யப்பட மீண்டும் சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. வடிவேலு இன்னமும் பழைய டெம்ப்ளேட்டுக்குள்ளேயே இருக்கிறார் என்று படம் பார்த்த ரசிகர்கள் ஓபனாக விமர்சனம் வைத்தனர்.

மாமன்னன்: அந்தப் படத்துக்கு பிறகு மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். மாரி செல்வராஜ் பல பேட்டிகளில் சொன்னபடியே இதுவரை பார்க்காத வடிவேலுவை மாமன்னனில் காட்சிப்படுத்தியிருந்தார் மாரி. வடிவேலுவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டு படமும் மெகா ஹிட்டடித்தது. மேலும் இனி வடிவேலுவுக்கு மாமன்னன் போன்ற கதாபாத்திரம்தான் அதிகம் வரும் என ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

சந்திரமுகி 2: இதனையடுத்து அவரது நடிப்பில் சந்திரமுகி 2 படம் வெளியாகவிருக்கிறது. சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் எப்படி அவர் கலக்கினாரோ அதேபோல் இரண்டாவது பாகத்திலும் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் டப்பிங் கொடுத்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. படமானது செப்டம்பர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது.

உயர்த்திய வடிவேலு: இந்நிலையில் வடிவேலு தனது சமப்ளத்தை உயர்த்திவிட்டதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மாமன்னன் படம் கொடுத்த வெற்றியால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றனவாம். எனவே அவர் தனது சம்பளத்தை ஐந்து கோடியாக உயர்த்தியிருக்கிறாராம். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X