ரெட் கார்டு பிரச்சனைக்கு இடையே வடிவேலுவுக்கு இரட்டை சந்தோஷம்
Recommended Video

சென்னை: ரெட் கார்டு கொடுக்கப்படும் பிரச்சனைக்கு இடையே வைகைப் புயல் வடிவேலுவுக்கு இரட்டை சந்தோஷம் ஏற்பட்டுள்ளது.
இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க முடியாது என்று வடிவேலு தயாரிப்பாளர் சங்கத்திடம் கடிதம் அளித்துள்ளார். வடிவேலு மீது புலிகேசி பட தயாரிப்பு தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்தே அவர் அவ்வாறு கடிதம் அளித்தார்.
வடிவேலுவுக்கு நடிக்க தடை விதிக்கலாமா என்று தயாரிப்பாளர் சங்கம் யோசித்துக் கொண்டிருக்கிறது.

பேரப்பிள்ளைகள்
கர்ப்பமாக இருந்த வடிவேலுவின் மகள் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதனால் வடிவேலு இரட்டை மகிழ்ச்சியில் உள்ளார்.

கொண்டாட்டம்
தனக்கு இரட்டை பேரப்பிள்ளைகள் பிறந்துள்ளதை அடுத்து வடிவேலு தனது உறவினர்கள், நண்பர்களுக்கு பிரமாண்டமான பார்ட்டி கொடுத்து தனது மகிழ்ச்சியை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வருத்தம்
வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுத்துவிடாதீர்கள் விஷால். அவரை போன்ற காமெடியன் தமிழ் திரையுலகிற்கு தேவை. அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெட் கார்டா?
புலிகேசி தயாரிப்பு தரப்பும், வடிவேலுவும் சமாதானமாகிவிட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் வடிவேலு படத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











