தாயை பறிகொடுத்து 8 மாசம் கூட ஆகல..தம்பியின் திடீர் மறைவால் கண்கலங்கி நிற்கும் வடிவேலு!
சென்னை: தம்பியின் திடீர் மறைவால் சொல்ல முடியாத துயரத்தில் இருக்கும் வடிவேலு கலங்கிய கண்ணுடன் நிற்கிறார்.
சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்றாலும், படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் சொந்த பந்தங்களுடன் மதுரையில் தான் வடிவேலு வசித்து வந்தார்.

பெரிய குடும்பம்: நடிகர் வடிவேலுவுக்கு மூன்று சகோதரர்கள் மற்றும் இரண்டு தங்கைகள் என பெரிய குடும்பம், சினிமாவில் பிரபலமான பின் உடன் பிறந்தவர்களுக்கு வசதியாக திருமணம் செய்து வைத்து அழகு பார்த்துள்ளார். திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்த போதும், தனது கடந்த காலத்தை மறக்காமல், மகன் சுப்ரமணியனுக்கு சிவகங்கையில் ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.
தாயை பறிகொடுத்தார்: வடிவேலுவின் தாயார் சரோஜினி என்ற பாப்பா வயது மூப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம் இறந்த நிலையில், வடிவேலுவின் தம்பி ஜெகதீசன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று இறந்துள்ளார். கல்லீரல் செயலிழந்ததன் காரணமாக கடந்த சில தினங்களாக மதுரை ஐராவதநல்லூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கலங்கிய கண்ணுடன்: 55 வயதே ஆன ஜெகதீசன், மலைக்கோவில் தீபம், காதல் அழிவதில்லை போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களில் மட்டுமே நடித்த அவர், சினிமாவில் நடிக்க முடியாமல் போனதால், ஜவுளிக்கடை வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். அம்மா பறிகொடுத்த 7 மாதத்திலேயே சகோதரரை பறி கொடுத்துவிட்டு, கண்ணில் நீர்வழிய, சோகமே உருவான முகத்துடன் வடிவேலு, சகோதரரின் இறுதிச்சடங்கு பணிகளை கவனித்து வருகிறார். அவருக்கு அமைச்சர் மூர்த்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும், வடிவேலுவின் ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் ஆறுதல் கூறி அவரை தேற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











