Vijay Sethupathi - சூதுகவ்வும் படத்தில் நடிக்க வேண்டியது இவர்தான்.. ச்ச மிஸ் ஆகிடுச்சே..

சென்னை: Vijay Sethpathi (விஜய் சேதுபதி) சூதுகவ்வும் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக முதலில் நடிக்க வேண்டியவர் குறித்த விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தலை காட்டி ஹீரோவாக வளர்ந்தவர் விஜய் சேதுபதி. அவர் முதன்முதலில் நடித்த தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தன்னுடைய நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் தமிழ் சினிமாவில் பெரும் ரவுண்டு வருவார் என்றும் பலரால் கணிக்கப்பட்டார்.

Vadivelu is the first choice to Soodhu Kavvum Movie

தொடர் ஹிட்டுகள்: அதற்கேற்றபடிதான் விஜய் சேதுபதியின் கிராஃப்பும் இருந்தது. அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், சூதுகவ்வும் ஆகிய படங்கள் வரிசையாக மெகா ஹிட்டாகின. இதனால் அத்தனை வருட உழைப்புக்கும் சேர்த்து வெற்றிகளை சுவைத்தார் சேது. முக்கியமாக ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பு, டயலாக் டெலிவரி என அனைத்தையும் மாற்றி தான் ஒரு மிகச்சிறந்த நடிகன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார்.

கதைதான் முக்கியம்: இடையில் சில சறுக்கல்களை சந்தித்த விஜய் சேதுபதி கதை என்ன கேட்டாலும் அதற்காக எது வேண்டுமானாலும் செய்வேன் என்ற நிலைக்கு நகர்ந்தார். பொதுவாக ஒருவர் ஹீரோவாக ஹிட் கொடுத்துவிட்டால் அந்த இடத்திலிருந்து நகர மறுப்பார்கள். ஆனால் விஜய் சேதுபதியோ அப்படி இல்லை. ஹீரோவாக பீக்கில் இருந்தபோதே பேட்ட, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாகவும் கலக்கினார்.

ஹிந்தியில் என்ட்ரி: அதேபோல் தமிழில் கலக்கிக்கொண்டிருந்த விஜய் சேதுபதி ஹிந்தியிலும் நுழைந்திருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான ஃபர்ஸி வெப் சீரிஸ் பெரும் வெற்றி பெற்றது. அதேபோல் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்த அவர் கடைசியாக ஹிந்தியில் ஜவான் படத்தில் வில்லனாக நடித்தார். அதேபோல் கத்ரீனா கைஃபுடன் நடித்திருக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது.

சூதுகவ்வும்: விஜய் சேதுபதியின் கரியரில் மிக மிக முக்கியமான படம் சூதுகவ்வும். நலன் குமாரசாமி இயக்கியிருந்த அந்தப் படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. ஒரு ஹீரோ பீக்கில் இருக்கும்போது ஏற்க தயங்கும் கதாபாத்திரத்தையும், தோன்ற தயங்கும் தோற்றத்தையும் ஏற்று விஜய் சேதுபதி அதகளம் செய்திருப்பார். இந்த சூழலில் அந்தப் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய நடிகர் குறித்த விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

யார் நடிகர்: அதாவது நலன் குமாரசாமி முதலில் வைகைப்புயல் வடிவேலுவிடம்தான் இந்தக் கதையை சொல்லியிருக்கிறார். வடிவேலுவுக்கோ கதை மீது திருப்தி இல்லாமை மற்றும் தனக்கு இந்த கெட் அப் செட்டாகுமா என்ற தயக்கத்தில் சூதுகவ்வும் படத்தை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் வடிவேலு நடித்திருந்தால் நிச்சயமாக படம் வேறு ஃப்ளேவரில் இருந்திருக்கும் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X