twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வடிவேலுவுக்கு ரொம்ப அகந்தை... விளாசிய மூடர் கூடம் நவீன்!

    |

    சென்னை : இயக்குனர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நவீன் மூடர் கூடம் மூலம் பிரபலம் அடைந்தார்

    இப்பொழுது அலாவுதீனும் அற்புத கேமராவும் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    இம்சை அரசன் 23ம் புலிகேசி பட விவகாரத்தில் வடிவேலு மிகவும் அகந்தையாக பேசியுள்ளார் என நவீன் நேர்காணல் ஒன்றில் விளாசியுள்ளார்

    பீஸ்ட் ரிலீஸ் தேதி இது தானா...காமெடி நடிகரின் ட்வீட்டால் அதிரும் சோஷியல் மீடியா பீஸ்ட் ரிலீஸ் தேதி இது தானா...காமெடி நடிகரின் ட்வீட்டால் அதிரும் சோஷியல் மீடியா

    டார்க் காமெடி ஜானரில்

    டார்க் காமெடி ஜானரில்

    கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மூடர் கூடம் திரைப்படம் டார்க் காமெடி ஜானரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சென்றாயன், நவீன், ராஜாஜி, குபேரன் ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்த படத்தில் நடிகை ஓவியா கதாநாயகியாக நடித்து இருப்பார். முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் பல சமூக கருத்துக்களை உள்ளடக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்றது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற இந்த படத்தில் படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்து இருந்தார் நவீன்.

    அலாவுதீனும் அற்புத கேமராவும்

    அலாவுதீனும் அற்புத கேமராவும்

    மூடர் கூடம் வெற்றிக்கு பிறகு நவீன் இயக்கத்தில் உருவாகிவந்த அக்னிசிறகுகள் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து வருகின்றனர். ஆக்சன் திரில்லர் பின்னணியில் உருவாகி வரும் இந்த படம் தயாரிப்பு நிலையில் உள்ளது. இதற்கிடையில் அலாவுதீனும் அற்புத கேமராவும் என்ற படத்தையும் நவீன் இயக்கி வருகிறார். இயக்குனர் சிம்புதேவன் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த நவீன் தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் தனி இடத்தை பிடித்துள்ளார்.

    இரட்டை வேடத்தில் மன்னராக

    இரட்டை வேடத்தில் மன்னராக

    இம்சை அரசன் 23ம் புலிகேசி குறித்து வடிவேலு பேசியதை நவீன் தற்போது விளாசியுள்ளார். வடிவேலு இரட்டை வேடத்தில் மன்னராக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தை இயக்குனர் சிம்புதேவன் இயக்கினார். சிம்புதேவன் உலகத்தில் பேண்டஸி கதை களத்தில் வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது வசூலிலும் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார்.

    ஒருமையில் திட்டினார்

    ஒருமையில் திட்டினார்

    பிரம்மாண்ட வசூலை வாரிக்குவித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி பாகம்-2, இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரில் உருவாக இருந்தது . இந்த படத்திலும் வடிவேலு ஹீரோவாக நடிக்க இருந்தார். சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கரின் தயாரிப்பில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சில தினங்களிலேயே நின்று போனது. இது குறித்து நடிகர் வடிவேலு பேசியது மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது. அதில் இயக்குனர் சிம்புதேவன் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை இயக்கிய போது ஒரு அறிமுக இயக்குனர். அவருக்கு ஒன்றுமே தெரியாது வெறும் ஒன் லைனை மட்டும் என்னிடம் கூறினார் அதை நான் தான் பில்டப் செய்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை வெற்றிப்படமாக ஆக்கினேன். என பேசியதோடு சிம்பு தேவனை அவன் இவன் என அதில் ஒருமையிலும் பேசியிருப்பார்.

    வடிவேலுவுக்கு ரொம்ப அகந்தை

    வடிவேலுவுக்கு ரொம்ப அகந்தை

    தன்னுடைய குருவை ஒருமையிலும் பேசியது மட்டுமல்லாமல் அவருக்கு ஒன்றுமே தெரியாது வெறும் பெயருக்கு மட்டுமே அந்த படத்தில் இயக்குனராக இருந்துள்ளார் என வடிவேலு கூறியதை அவர் அகந்தையில் பேசியுள்ளார் அவர் பேசியது மிகவும் தவறு யாராக இருந்தாலும் மரியாதை கொடுத்து பேச வேண்டும் என நவீன் கொந்தளித்து விளாசியுள்ளார்.

    English summary
    Vadivelu is very arrogant slams Moodar Koodam Naveen
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X