Maamannan Audio Launch - மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழா: ரகளையான வடிவேலுவின் பேச்சு

சென்னை: Maamannan Audio Launch (மாமன்னன் இசை வெளியீட்டு விழா) மாமன்னன் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு பேசியது அனைவரையும் ரசிக்க வைத்தது.

வைகைப்புயல் வடிவேலு நீண்ட் நாட்களுக்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். தனது இரண்டாவது இன்னிங்ஸில் முதலில் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்,கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோருடன் மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படமானது ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

எதிர்பார்ப்பு: கர்ணன் படத்தை இயக்கி முடித்த பிறகு யாரும் எதிர்பார்க்காதவகையில் உதயநிதி ஸ்டாலினோடு கூட்டணி அமைத்தார் மாரி செல்வராஜ். பெரும் சர்ப்ரைஸாக படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்ற அறிவிப்பும் வெளியானது. மேலும் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால், ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். முதல் இரண்டு படங்களையும் நல்லபடியாக இயக்கி சமூகத்தில் விவாதத்தை கிளப்பிய மாரி செல்வராஜ் மாமன்னனில் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது.

Vadivelu Jolly speech in Maamannan Audio Launch

காட்டு பசியில் வடிவேலு: படத்துக்கான எதிர்பார்ப்புக்கு ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் படத்தில் வடிவேலு நடிப்பது. சில பிரச்னைகளால் பல வருடங்கள் ஓய்வில் இருந்த வடிவேலுவுக்கு இந்தப் படம் தரமான கம்பேக்காக அமையும் என ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி வழக்கமான வடிவேலுவை இந்தப் படத்தில் பார்க்க முடியாது என மாரி செல்வராஜும் கூறியிருப்பதால் வடிவேலுவின் கேரக்டர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

கதைக்களம் என்ன?: மாமன்னன் படம் மேற்கு மாவட்ட அரசியலை பேசுகிறது என மாரி செல்வராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதனையடுத்து மேற்கு மாவட்ட அரசியல் என்றால் நிச்சயம் சேலத்தை தொட்டிருப்பார்கள். சேலம்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஊர். எனவே படத்தில் அவரை மறைமுகமாக தாக்குவார்களோ என ரசிகர்கள் தங்களது யூகங்களை கேள்விகளாக சமூக வலைதளங்களில் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர். நேற்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

வடிவேலு பேச்சு: விழா ஆரம்பிக்கும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு, "ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள் என்கிறார்கள். ஆனால் எனக்கு கேப்பே கிடையாது. மீம் கிரியேட்டர்கள் மூலம் உங்கள் பாக்கெட்டுக்குள் இருக்கும் ஃபோனில் நான் வந்துகொண்டுதான் இருக்கிறேன். மாமன்னன் படம் சிறந்த கதைக்களம். சிறந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியிருக்கிறேன். பாடியிருக்கிறேன் என்பதைவிட அவர் என்னை பாட வைத்திருக்கிறார். என் அம்மா இறக்கவில்லை. அவரும் என்னை பாடுவதற்கு தூண்டினார்" என்றார்.

முன்னதாக, செய்தியாளரளிடம் பேசும்போது எப்போதும்போல் ரகளையான பாடி லாங்குவேஜுடனும், தனது வழக்கமான ஸ்டைலுடனும் வடிவேலு பேசியது ரசிக்கும்படி இருந்தது. மேலும், படம் குறித்து செய்தியாளர் ஒருவர் தொடர்ந்து கேட்க, "விட்டா நீ என்னைய நோண்டி படத்தோடி மொத்த கதையையும் சொல்லவெச்சுடுவ போல" என ஜாலியாக பேசிவிட்டு சென்றார்,.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X