கால் வெச்சா கன்னி வெடிதான்.. விமர்சித்தவங்கள காணும்.. வடிவேலு ஓபன் டாக்

சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2, மாரீசன் என்று பிஸியாக நடித்துவருகிறார் வடிவேலு. இந்தச் சூழலில் அவர் அளித்திருக்கும் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. .

கோலிவுட் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு..90களில் அறிமுகமான அவர் 90ஸ் கிட்ஸுக்கும் செட் ஆவார் தற்போதைய தலைமுறையான 2K கிட்ஸுக்கும் செட் ஆவார். சோஷியல் மீடியா சூழ்ந்த இந்த உலகில் பல மீம்ஸ்களுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருப்பது வடிவேலுதான். சில பிரச்னைகள் காரணமாக 10 வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தாலும் அனைத்து வீடுகளின் தொலைக்காட்சிகள் வழியாக வைகைப்புயல் வீசிக்கொண்டுதான் இருந்தது.

Vadivelu Kamal Haasan

அரசியல் மேடை: 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மேடை ஏறிய வடிவேலு விஜயகாந்த்தை கடுமையாக தாக்கி பேசினார். ஆனால் அதிமுக - தேமுதிக கூட்டணி அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றது. எனவே இனியும் வடிவேலுவை வைத்து படம் எடுத்தால் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ என திரைத்துறையினர் அஞ்சி வடிவேலுவை கண்டுகொள்ளாமல் இருந்தனர். அதுமட்டுமன்றி வடிவேலுவின் சில தனிப்பட்ட நடவடிக்கைகளுமே அவர் திரைத்துறையிலிருந்து காணாமல் போனதற்கு காரணம் என்றும் கூறப்படுவதுண்டு.

ரீ என்ட்ரி: இப்படிப்பட்ட சூழலில் வடிவேலுவை சுற்றி இருந்த பஞ்சாயத்து தீர்ந்து போனதை அடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. குறிப்பாக வடிவேலுவின் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை என்றும் ரசிகர்கள் ஓபனாக பேசினார்கள். அதேசமயம் அடுத்ததாக அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. பல வருடங்கள் கழித்து வடிவேலுவுக்குள் இருந்த குணசித்திர நடிகரை மாரி செல்வராஜ் வெளியே கொண்டு வந்திருந்தார்.

அடுத்தடுத்த படங்கள்: மாமன்னன் பெற்ற மாபெரும் வெற்றியை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. அந்தவகையில் அடுத்ததாக ஃபகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே ஃபகத்தும், வடிவேலுவும் மாமன்னனில் போட்டிப்போட்டுக்கொண்டு தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். எனவே இந்தப் படத்தில் இருவரையும் மீண்டும் பார்க்கும் நிலை உருவாகியிருப்பதால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

வடிவேலு பேட்டி: நிலைமை இப்படி இருக்க தனியார் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார் வடிவேலு. அப்போது பேசிய அவர், "நல்லதைவிடவும் சினிமாவில் கெட்டதுதான் நிறைய இருக்கிறது. அதை தாண்டித்தான் வர வேண்டும். ஒருமுறை கமல் சாரிடம், 'கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னிவெடியா இருக்கே. எப்படி தாண்டி வந்தீங்க என்று கேட்டேன். அதற்கு அவர், நான் பட்ட பாடு எல்லாம் அதைவிட பெருசு. அதையெல்லாம் மனசுல வைக்காதனு சொன்னார்.

விமர்சித்தவர்களை காணும்: ஒருமுறை அவரிடம் ஃபோனில் பேசும்போது, 'வடிவேலு இந்த மாதிரிலாம் நிறைய வருவார்கள். நடித்துக்கொண்டே இருக்க வேண்டும்' என்று சொன்னார். நான் ரீ என்ட்ரி கொடுத்ததும் என்னை விமர்சித்தவர்களை காணவில்லை. தொழிலை உயிராக நேசித்தால் எங்கும் எப்போதும் தோற்கமாட்டோம். கீழே விழமாட்டோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X