பிரச்சனை தீர்ந்தது: பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வரப் போகும் வடிவேலு
Recommended Video

சென்னை: வடிவேலுவுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாம். இதையடுத்து வடிவேலு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் மீண்டும் நடிக்கப் போகிறாராம்.
இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை சிம்புதேவன் இயக்க வடிவேலு ஹீரோவாக நடித்தார். ஷங்கர் தயாரித்த இந்த படத்திற்காக ரூ. 6 கோடியில் செட் போடப்பட்டது.
இந்நிலையில் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் படப்பிடிப்பு நின்றது. இதையடுத்து பிற படங்களில் நடிக்க வடிவேலுக்கு தடை விதிக்கப்பட்டது.

வடிவேலு
வடிவேலுவுக்கும், ஷங்கருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மதுரையில் இருக்கும் வடிவேலு சென்னைக்கு வந்து இம்சை அரசன் 24ம் புலிகேசி படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம். படப்பிடிப்பை ஜனவரி மாதம் துவங்க சிம்புதேவன் திட்டமிட்டுள்ளாராம்.

ரூ. 9 கோடி
இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்திற்காக ரூ. 6 கோடியில் செட் போட்டார்கள். 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பிரச்சனை ஏற்பட்டு வடிவேலு நடிக்க மறுத்தார். இதையடுத்து வடிவேலுவிடம் ரூ. 9 கோடி நஷ்டஈடு வாங்கித் தருமாறு ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

அடம்
இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் மீண்டும் நடிக்க வருமாறு தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. மீண்டும் நடிக்கவே முடியாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்தே அவர் பிற படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

வடிவேலு
வடிவேலு இனி நடிக்கவே மாட்டாரா, அவரை திரையில் பார்க்க மாட்டோமா என்று ஏங்கிய ரசிகர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. விரைவில் வடிவேலுவை மீண்டும் பெரிய திரையில் பார்க்கலாம். அவர் இல்லாமல் உருவாகியுள்ள வெற்றிடம் இனி இருக்காது. வாங்க வடிவேலு, பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வாங்க.


Click it and Unblock the Notifications











