தலை பெருசா இருந்தா மட்டும் தலைவனாக முடியாது: வடிவேலு சாடல்

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய நேற்று வடிவேலு நாகர்கோவிலில் இருந்து நெல்லை மாவட்டம் வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான காவல்கிணறு விலக்கில் வள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் ஞானதிரவியம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர் காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் முன்பு ராதாபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேல்துரையை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
நீ்ங்கள் வாக்களித்து கருணாநிதியை 6-வது முறையாக தமிழக முதல்வராக்க வேண்டும். அவர் ஏற்கனவே ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மேலும், அவர் செய்யப் போகிற நலத்திட்டங்களையும் மீண்டும் ஏழை மக்கள் பயன்பெறும்படி செய்ய உங்களை கேட்டு கொள்கிறேன். கேப்டன், கேப்டன் என்பார்கள், தண்ணீரில் மிதக்கின்ற கப்பலை ஓட்டுகிறவன்தான் கேப்டன். எந்த நேரத்திலும் தண்ணீரில் மிதக்கிறவன் எல்லாம் கேப்டன் இல்லை. தலை பெருசா இருந்தா மட்டும் தலைவனாக ஆகிவிட முடியாது. மூளையும் இருக்கணும். அறிவு, ஆற்றல், பண்பு, சிந்தனை உள்ள ஒரே தலைவர் கலைஞர்தான்.
ஒரு கட்சி தலைவர் வேட்பாளரை அடிப்பாரா, நல்லா யோசிச்சு பாருங்க. நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் முதல்வர் என்கிறார்கள். தலைவன் என்கிறார்கள். கருப்பு எம்.ஜி.ஆர். என்கிறார்கள். அதனை நம்பாதீர்கள். அந்த கூட்டணி கட்சியிலேயே அவருக்கு மரியாதை இல்லை. கூட்டணி தலைவர்களுக்கம் மரியாதை இல்லை. அங்கு ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு. அங்கு போடுகிற திட்டம் எல்லாம் வரும். ஆனா வராது. கலைஞர் போட்ட திட்டம் எல்லாம் கண்டிப்பா வரும் என்றார்.


Click it and Unblock the Notifications











