Vadivelu: ஃபஹத் பாசில் யாருன்னு தெரியாது சொன்ன வடிவேலு... ஷாக்கான மாரி செல்வராஜ்

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் இருந்து ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய ராசா கண்ணு என்ற பாடல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.

உதயநிதியின் கடைசிப் படமாக உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் ஃபஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில், ஃபஹத் பாசில் குறித்து வடிவேலு பேசியதை மாரி செல்வராஜ் ஒரு பேட்டியில் ஓபனாகவே தெரிவித்துள்ளார்.

 Vadivelu: Mari Selvaraj told the truth about what Vadivelu said about Fahadh Faasil

ஃபஹத் பாசிலை யாருன்னு கேட்ட வடிவேலு: உதயநிதியின் கடைசிப் படமாக உருவாகியுள்ள மாமன்னன் ஜூன் மாதம் வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. உதயநிதியுடன் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் ஆகியோர் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். முற்றிலும் புதிய கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மாமன்னன் படத்தின் முதல் பாடல் வெளியானது. ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு குரலில் வெளியான இந்தப் பாடலுக்கான வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். ராசா கண்ணு என்ற டைட்டிலில் வெளியான இந்தப் பாடல் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. "மலையில தான் தீப்பிடிக்குது ராசா... என் மனசுக்குள்ளதான் வெடி வெடிக்குது ராசா" என்ற முதல் வரிகளிலேயே வடிவேலுவின் குரல் சிலிர்க்க வைத்துள்ளது.

இதனிடையே மாமன்னன் திரைப்படம் உருவானது குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ். அதில், வடிவேலு, ஃபஹத் பாசில் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தது பற்றியும் மனம் திறந்துள்ளார். உதயநிதியின் கடைசிப் படம் என்பதால் தன்னிடம் இருந்த ஒன்லைனை கதையாக மாற்றியதாகவும், அதன்பின்னரே படப்பிடிப்புக்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.

 Vadivelu: Mari Selvaraj told the truth about what Vadivelu said about Fahadh Faasil

மேலும், முதலில் வடிவேலு கேரக்டர் குறித்து சொன்னதும் உதயநிதி ஷாக்காகிவிட்டார். இந்த கேரக்டரில் வடிவேலு சார் எப்படி நடிப்பார் என கேட்டார். அதன்பிறகு அவரே அசந்து போகும் அளவிற்கு வடிவேலு நடித்ததாகவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். அதேபோல், வில்லன் கேரக்டரில் ஃபஹத் பாசிலை நடிக்க வைக்கலாம் என வடிவேலுவிடம் கூறினாராம்.

ஆனால், வடிவேலுவோ "யார் அந்த ஃபஹத்... எனக்கு தெரியாது" எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு ஷாக்கான மாரி செல்வராஜ் "மலையாள டைரக்டர் பாசில் சார் பையன்னு சொல்லி அவரோட படங்கள் பெயரை கூறினேன். அதன்பிறகே அவருக்கு ஃபஹத் பாசிலை தெரியும்" என்றாராம். அதாவது அவரது படங்கள் பார்த்துள்ளேன், ஆனால் பெயர் நினைவில் இல்லை எனக் கூறி சமாளித்துள்ளார் வடிவேலு.

 Vadivelu: Mari Selvaraj told the truth about what Vadivelu said about Fahadh Faasil

இந்தத் தகவலை மாரி செல்வராஜ்ஜே மிகவும் ஆச்சரியமாக விவரித்துள்ளார். அதேபோல் மாமன்னன் படத்தில் லால் நடித்துள்ள சர்ப்ரைஸ் தகவலையும் பகிர்ந்துள்ளார் மாரி செல்வராஜ். இந்தப் படத்தில் கண்டிப்பாக நடித்தே தீருவேன் என லால் சார் அடம்பிடித்து நடித்துள்ளதாகவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். குறைந்த நாட்களே படப்பிடிப்பு, சிறிய கேரக்டர் என தெரிந்தும் தான் லால் இந்தப் படத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் முதலில் ஃபஹத் பாசிலை யாரென தெரியாது எனக் கூறிய வடிவேலு சார், படப்பிடிப்பில் அவருடன் தான் அரட்டை அடித்துக்கொண்டிருந்ததாகவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X