டைரக்டர் மிஷ்கினின் அடுத்தப் படத்தில் வைகை புயலுக்கும் முக்கிய ரோலாம்! அப்ப நீங்கிடுச்சா தடை?

By

சென்னை: இயக்குனர் மிஷ்கின், அடுத்து இயக்கும் படத்தில் வைகை புயல் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

Recommended Video

Mysskin Funny Speech At Baaram Movie Press Meet | Mysskin | Ram | Vetrimaaran

'சைக்கோ'வை அடுத்து, விஷாலின் 'துப்பறிவாளன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார் மிஷ்கின்.

இதன் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

விஷால்-மிஷ்கின்

விஷால்-மிஷ்கின்

படத்தில் நடித்தவர்கள் சமாதானம் செய்து வைத்ததாகக் கூறப்பட்டது. பின்னர் சில நாட்கள் அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னைத் திரும்பியது. அடுத்த ஷெட்யூலுக்கு ரெடியாகிக் கொண்டிருந்த நிலையில் படத்தில் இருந்து திடீரென மிஷ்கின் நீக்கப்பட்டார். விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் ஏற்பட்ட பிரச்னை பெரிதானதை அடுத்து நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

நூறு கோடி

நூறு கோடி

போட்ட பட்ஜெட்டை விட அதிகமாக ரூ.40 கோடி ஆகும் என்று மிஷ்கின் கேட்டாராம். இதுதான் பிரச்னைக்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இதுபற்றி மிஷ்கினிடம் கேட்டபோது, 'நான் 40 கோடி கேட்கலை. 400 கோடி கேட்டேன். கிளைமாக்ஸுக்கு மட்டும் நூறு கோடி கேட்டிருக்கேன். ஏன்னா, விஷால் சேட்டிலைட்ல இருந்து குதிக்கிற மாதிரி காட்சியை எடுக்கிறோம்' என்று கிண்டலாகக் கூறியிருந்தார்.

சிம்புவை இயக்குகிறார்

சிம்புவை இயக்குகிறார்

பின்னர் தனது அடுத்தப்படம் பற்றி விரைவில் அறிவிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் சிம்புவுடன் கைகோர்க்கப் போவதாகக் கூறப்பட்டது. சமீபத்தில் சிம்புவை சந்தித்து மிஷ்கின் கதை சொன்னதாகவும் அதைக் கேட்ட சிம்பு நடிக்க சம்மதித்து உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் வைகைப் புயல் வடிவேலுவும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

வடிவேலு மீது புகார்

வடிவேலு மீது புகார்

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார், அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஷங்கர். அதில் வடிவேலு நடித்துக் கொடுக்க மறுத்ததால், படத்துக்காக போடப்பட்ட செட் செலவு உட்பட ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்றும் அதை அவர் ஈடுகட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

நடிக்கத் தடை

நடிக்கத் தடை

இந்தப் பிரச்னை குறித்துப் பேச தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அழைத்தபோது வடிவேலு வரவில்லையாம். இதையடுத்து அவருக்கு படங்களில் நடிக்கத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் அவரை யாரும் நடிக்க அழைக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் மிஷ்கின் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X