வடிவேலுவின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா?.. ட்ரெண்டாகும் புகைப்படம்
சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 படத்தில் நடித்து முடித்தவர்; இப்போது மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் விவேக்கும் வளர்ந்துவந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி சூழலே இருந்தது. ஆனால் எதற்கும் அஞ்சவில்லை வடிவேலு. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு உழைத்துக்கொண்டே இருந்தார் அவர்.

ஆரோக்கியமான வளர்ச்சி: குறிப்பாக, தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அதேபோல் எந்த ஈகோவும் இல்லாமல் விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். இதனால் அவரது வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருந்தது. ஒருகட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும்; காலம் மாறியதன் காரணமாகவும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தனர்.
வைகை புயல்: அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார் வடிவேலு. தனக்கென தனி டீமை உருவாக்கிக்கொண்டு காமெடி செய்து ரகளைகட்டி அடித்தார். இதனால் அவரது வளர்ச்சி 2000களின் தொடக்கத்தில் புயல் வேகத்தில் இருந்தது. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் அப்போது இருந்தது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும் புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார் வைகை புயல் வடிவேலு. சூழல் இப்படி இருக்க அவருக்கு ஏற்பட்ட சில நெருக்கடிகளாலும், பஞ்சாயத்துக்களாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.
இன்னொரு முகம்?: இதனையடுத்து பிரச்னைகள் தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்க வந்தார் வடிவேலு. அவர் மீண்டும் சினிமாக்களில் நடிக்க வந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும் அவ்வப்போது வந்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை கொடுத்தன. அதாவது அவருடன் நடித்த பலரும் வடிவேலு தங்களை வளர விடவில்லை என்று ஓபனாகவே பேச ஆரம்பித்தனர். அதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் வடிவேலுவின் இன்னொரு முகமா என்று அதிர்ச்சியுடன் கேட்க ஆரம்பித்தனர்.
ட்ரெண்டாகும் புகைப்படம்: இந்நிலையில் வடிவேலு பெரும்பாலும் தனது குடும்பத்தினரின் புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிட்டதில்லை. இப்படிப்பட்ட சூழலில் வடிவேலுவின் தாய் புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதனைப் பார்த்த ரசிகர்கள்; இப்படிப்பட்ட மகா கலைஞனை கொடுத்த தாய்க்கு வாழ்த்து தெரிவித்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். வடிவேலுவின் தாய் பெயர் வைத்தீஸ்வரி. அவர் கடந்த ஆண்டு தனது 87ஆவது வயதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











