கார்த்தி - சந்தானம் காமெடி எல்லாம் மறக்க முடியுமா?.. இப்போ வடிவேலு இணையுறாராம்.. இயக்குநர் அவரா?

சென்னை: சிறுத்தை, ஆல் இன் ஆல் அழகுராஜா, அலெக்ஸ் பாண்டியன், சகுனி என பல படங்களில் கார்த்தி மற்றும் சந்தானத்தின் எவர்க்ரீன் காமெடி இன்றைக்கும் சில டிவி சேனல்களை வாழ வைத்தும் ரசிகர்களை சிரிக்க வைத்தும் கொண்டிருக்கிறது. நடிகர் சந்தானம் ஹீரோவான பின்னர், அந்த காம்பினேஷன் அப்படியே நின்றுவிட்டது.

தமிழ் சினிமாவில் வைகைப்புயல் வடிவேலு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கலாட்டா செய்துள்ள நிலையில், இளம் நடிகர்களுடன் அவர் அதிகமாக இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், கார்த்தியின் அடுத்த படத்தில் வடிவேலு இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

vadivelu karthi santhanam

மாமன்னன் படத்தின் மூலம் வடிவேலு இப்படியும் நடிப்பாரா என பலரையும் வியக்க வைத்தார் மாரி செல்வராஜ். மீண்டும் காமெடியனாக அவர் சுந்தர். சி படத்தில் நடித்து வருகிறார். மேலும், சில படங்களிலும் வடிவேலு நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வடிவேலு ஃபார் லைஃப்: கொரோனா காலத்தில் திடீரென காண்ட்ராக்டர் நேசமணி திடீரென மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. அதன் பின்னர் தான் வடிவேலுவுக்கு இருந்த தடை நீக்கப்பட்டு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரியை லைகா தயாரிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் கொடுத்தார். அந்த படமும் சந்திரமுகி 2 படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. மாமன்னன் படம் தான் வடிவேலுவுக்கு சரியான கம்பேக்காக அமைந்தது. வடிவேலு ஃபார் லைஃப் என கடந்த சில நாட்களாக மீண்டும் சமூக வலைதளங்களில் வடிவேலுவின் எம் மகன் உள்ளிட்ட படங்களின் காமெடி காட்சிகளை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கார்த்தியுடன் இணையும் வடிவேலு: இந்நிலையில், டாணாக்காரன் படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கார்த்தி மற்றும் சந்தானம் காம்பினேஷனை பார்த்து சிரித்த ரசிகர்கள் கார்த்தி மற்றும் வடிவேலு காம்பினேஷனை முதன்முதலாக காண காத்திருக்கின்றனர். சர்தார் 2 படத்தை விரைவில் கார்த்தி முடிக்கவுள்ள நிலையில், அடுத்து டாணாக்காரன் இயக்குநர் படத்தில் தான் நடிக்கப் போகிறாராம். அந்த படம் முடிந்த பின்னர் தான் அடுத்த ஆண்டு கைதி 2 படத்தில் நடிக்கவுள்ளார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X