கிடைத்த நல்ல வாய்ப்பையும் கெடுத்துக் கொண்ட வடிவேலு?
Recommended Video

நகைச்சுவை நடிப்பில் யாராலும் அசைக்க முடியாத உச்சத்தில் இருந்தவர் வடிவேலு. ஆனால் ஒரு தவறான அரசியல் முடிவால் ஒரே நாளில் அதளபாதாளத்துக்குப் போய்விட்டார்.
கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டன பழைய வடிவேலுவைப் பார்த்து. இந்த ஆறு ஆண்டுகளில் அவர் நடிப்பில் 7 படங்கள்தான் வெளியாகின. மம்பட்டியான், மறுபடியும் ஒரு காதல், தெனாலிராமன், எலி, கத்தி சண்டை, சிவலிங்கா, மெர்சல். இவற்றில் தெனாலிராமனும், எலியும் அவர் ஹீரோவாக நடித்தபடம்.
மறுபடியும் ஒரு காதல் படத்தில் டாக்டராக வரும் பாத்திரம் மட்டும் இவற்றில் ரசிக்கும்படி அமைந்தது. ஆனால் மற்ற ஆறிலும் மருந்துக்கும் சிரிப்புக் காட்சிகள் இல்லை.

கைப்புள்ளய?
அவ்வளவுதானா வடிவேலு? இனி அந்த பழைய கைப்புள்ளயை, அமாவாசையைப் பார்க்க முடியாதா என்று அவரது ரசிகர்கள் ஏங்கிய நேரத்தில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் அவர் நடிப்பதாக செய்தி வெளியானது.

ஃபர்ஸ்ட் லுக் வந்த பிறகு
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்து, ஷூட்டிங் தேதியும் அறிவித்த நிலையில், படம் இனி அவ்வளவுதான்... நின்றுவிட்டது என்ற செய்தி கசிந்துள்ளது.

வடிவேலு அட்ராசிட்டி
ஏன்.. என்னாச்சு? ஏற்கெனவே இதே தளத்தில் வெளியான கிசுகிசுக்களில் சொல்லப்பட்டவை நிஜமாகிவிட்டன. ஆம்.. வடிவேலுவின் அட்ராசிட்டி தாங்க முடியாமல் ஷூட்டிங்கையே நிறுத்திவிட்டார் தயாரிப்பாளர் ஷங்கர் என்கிறார்கள்.

அட்வான்சை திருப்பிக் கொடுங்க
வடிவேலுவுக்குக் கொடுத்த அட்வான்ஸை திரும்பத் தரக் கோரியும், வேறு நடிகரை வைத்து இதே படத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறும் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் ஷங்கர் என்பது லேட்டஸ்ட் தகவல்.


Click it and Unblock the Notifications











