சந்திரமுகி 2 படப்பிடிப்பில் சுறா காமெடி செய்து காட்டிய வடிவேலு.. ராதிகா ஷேர் பண்ண சூப்பர் வீடியோ!

சென்னை: தடை நீக்கப்பட்ட நிலையில், பழையபடி பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் நகைச்சுவை நடிகர் வடிவேலு.

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் படங்களில் நடித்து வரும் வடிவேலு, அடுத்ததாக சந்திரமுகி 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், சந்திரமுகி 2 படப்பிடிப்பில் வடிவேலு செய்து காட்டிய சுறா படத்தின் சூப்பர் காமெடி சீன் வீடியோ டிரெண்டாகி வருகிறது.

வடிவேலு ரிட்டர்ன்ஸ்

வடிவேலு ரிட்டர்ன்ஸ்

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடிகர் வடிவேலு நடிக்கவே தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக பல பட வாய்ப்புகள் அவரை விட்டுச் சென்றது. ஆனால், அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக தீர்வான நிலையில், மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஹீரோவாக நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வரும் வடிவேலு மற்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகிறார்.

உதயநிதிக்கு அப்பா

உதயநிதிக்கு அப்பா

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு அப்பாவாக வடிவேலு நடித்து வருவதாகவும், அவருக்குத் தான் மாமன்னன் என்கிற டைட்டில் கேரக்டரே என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார்.

சந்திரமுகி 2

சந்திரமுகி 2

லைகா தயாரிப்பில் இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் மீண்டும் காமெடியனாக நடித்து வருகிறார் வைகைப் புயல் வடிவேலு. சமீபத்தில் படக்குழு நடத்திய பூஜை புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டான நிலையில், தற்போது வடிவேலு படப்பிடிப்பு தளத்தில் செய்த ரகளை வீடியோ டிரெண்டாகி வருகிறது.

ராதிகா வெளியிட்ட வீடியோ

விஜய், தமன்னா நடிப்பில் வெளியான சுறா படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி பாட்டுப் பாடும் போது, ரொம்ப உச்ச கட்டையில் பாடாதீங்க அப்புறம் ஹார்ட் வெடிச்சுடும் என்பதை சொல்லாமல், செய்கையிலேயே செய்து வடிவேலு கிண்டல் செய்திருப்பார். தற்போது அதே காமெடி காட்சியை சந்திரமுகி 2 படப்பிடிப்பில் வடிவேலு செய்ய அதனை படம் பிடித்த நடிகை ராதிகா சரத்குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி உள்ளார்.

அது சுறா ராதிகா

அது சுறா ராதிகா

ஃபேமஸ் படத்தில் இருந்து சூப்பரான காமெடி காட்சியை மீண்டும் எங்களுக்காக நடித்துக் காட்டியுள்ளார் வடிவேலு என ராதிக சரத்குமார் ட்வீட் போட்ட நிலையில், அது ஃபேமஸ் படம் இல்லை மேடம், அது விஜய் நடித்த சுறா படம் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர். சிலர், அந்த காட்சியையே எடுத்துப் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X