twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாரி செல்வராஜ் படத்தில் ‘மாமன்னன்’ உதயநிதி ஸ்டாலின் இல்லையாம்.. அப்போ கதையின் நாயகன் அவர் தானா?

    |

    சென்னை: பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார்.

    Recommended Video

    Udhayanidhi Stalin | 'கழகத் தலைவன்'... திமுக-வில் அல்ல *Kollywood | Filmibeat Tamil

    விக்ரம் மகன் த்ருவ் விக்ரம் நடிப்பில் உருவாகப் போகும் கபடி படத்தை அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ்.

    இந்நிலையில், 'மாமன்னன்' என்கிற டைட்டில் உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லை என்கிற தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

     குட்டவும் சிக்‌ஷயும் malayalam movie review : தீரன் பட பாணியில் ஒரு படம்..ஆனால் இது அந்த ரகமல்ல குட்டவும் சிக்‌ஷயும் malayalam movie review : தீரன் பட பாணியில் ஒரு படம்..ஆனால் இது அந்த ரகமல்ல

    மாரி செல்வராஜ்

    மாரி செல்வராஜ்

    கதிர், ‘கயல்' ஆனந்தி, யோகி பாபு நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவான அந்த படத்தில் சாதிய பிரச்சனையை ஆழமாகவும் அழுத்தமாகவும் ஏகப்பட்ட குறியீடுகளுடனும் சொல்லி இருப்பார். தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் ஒரு ஊருக்கு பேருந்து நிறுத்தம் அமைப்பது கூட சாதியின் பெயரால் தடுக்கப்பட்டது என்கிற உண்மையை உரக்கச் சொல்ல நாயகன் கையில் வாளும் கொடுத்திருப்பார்.

    மாமன்னன்

    மாமன்னன்

    கர்ணன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு நடித்து வரும் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. அந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. மனிதன், நெஞ்சுக்கு நீதி என கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் அரசியல் கதையம்சம் கொண்ட மாமன்னன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    மாமன்னன் யாரு

    மாமன்னன் யாரு

    இந்நிலையில், இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் டைட்டில் ரோலான ‘மாமன்னன்' இல்லை என்கிற ஹாட் தகவல் கசிந்துள்ளது. மாமன்னன் படத்தில் கதைப்படி அந்த பெயருக்கான ரோலில் நடித்து வருவது வடிவேலு தானாம். வடிவேலு மீண்டும் சினிமாவுக்கு ரிட்டர்ன் ஆகி உள்ள நிலையில், இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தரும் என்பதை தெரிந்து கொண்டு தான் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை முடிக்கும் முன்னதாக இந்த படத்தில் அவர் ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்கின்றனர்.

    வடிவேலுவின் வாரிசு

    வடிவேலுவின் வாரிசு

    மேலும், அரசியல் களம் கொண்ட கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் வடிவேலுவின் வாரிசாகத்தான் உதயநிதி ஸ்டாலின் வருகிறாராம். அவருக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ். கிட்டத்தட்ட தேவர்மகன் படத்தின் கதையை போலவே இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வந்தாலும், இயக்குநர் மாரி செல்வராஜ் வேறு ஒரு அரசியல் கோணத்தை இந்த படத்தில் வைத்துள்ளார் என்கின்றனர்.

    பகத் ஃபாசில் வில்லன்

    பகத் ஃபாசில் வில்லன்

    விஜய்சேதுபதி அதிக படங்களில் வில்லனாக நடித்துள்ளாரா? பகத் ஃபாசில் அதிக படங்களில் வில்லனாக நடித்துள்ளாரா? என பொதுத் தேர்வில் கேள்வியே வரும் அளவுக்கு இருவரும் வில்லன் கதாபாத்திரத்தை விரும்பி போட்டிப் போட்டு நடித்து வருகின்றனர். வடிவேலுவுக்கு ஆப்போசிட்டாக எதிர்கட்சி தலைவராக அழகம்பெருமாள் நடித்து வருவதாகவும், அவரது மகன் தான் பகத் ஃபாசில் என்றும் படத்தில் உதயநிதிக்கு அவர் தான் வில்லன் என்றும் கூறுகின்றனர்.

    English summary
    Legendary Comedy actor Vadivelu plays father character to Udhyanidhi Stalin and titular role in Mari Selvaraj's Maamannan strong buzz trending in cinema industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X