பிரபுதேவா - வடிவேலு இணைந்திருக்கும் Bang Bang ப்ரோமோ.. ஆல்டைம் ஃபேவரைட் கூட்டணி மீண்டும் வந்துடுச்சு

சென்னை: வைகை புயல் என்று கொண்டாடப்படும் வடிவேலு இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவர் நடித்த மாரீசன் திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. அடுத்தாக அவர் பிரபுதேவாவுடன் இணைந்து பேங் பேங் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே அவர்கள் இணைந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. எனவே இந்தப் படமும் அந்த ரிசல்ட்டையே பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.

வடிவேலு என்றால் பெரிய அறிமுகமெல்லாம் தேவையில்லை. தனது காமெடியின் மூலம் 24 மணி நேரமும் நம்முடன் கலந்திருப்பவர் அவர். அவரது கரியர் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது விஜயகாந்த்தை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் அரசியல் மேடை ஏறினார். ஆனால் அந்த அந்த மேடையே அவரது மார்க்கெட்டை அதள பாதாளத்தில் தள்ளியது. இதனால் சில வருடங்கள் சினிமா வாசமே இல்லாமல் இருந்தார். இனிமேல் அவரால் சினிமாவுக்குள் மீண்டும் வரவே முடியாது என்றுதான் அவரை விரும்பாதவர்கள் கூறினார்கள்.

ரீ என்ட்ரி தந்த வைகை புயல்: ஆனால் அவரை சுற்றி இருந்த பஞ்சாயத்துக்கள் எல்லாம் பேசி முடிக்கப்பட்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து அவர் சந்திரமுகி 2, மாமன்னன், கேங்கர்ஸ், மாரீசன் ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் மாமன்னன், மாரீசன் ஆகிய படங்கள் மட்டுமே ஹிட்டடித்தன. மேலும் அந்தப் படங்களில் அவர் காமெடி ரோல் மட்டும் செய்யாமல் கதைக்கும் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார்.

Vadivelu Prabhu Deva s Bang Bang Promo Out Fans Expect Comedy Blast
Photo Credit:

ரசிகர்களின் நம்பிக்கை: வடிவேலு காமெடியை தவிர்த்துவிட்டு ஒரு நாள் ரசிகர்களுக்கு நகராது என்றுதான் சொல்ல வேண்டும். அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தபோதுகூட அனைத்து காமெடி சேனல்களிலும் அவர்தான் இருந்தார். முக்கியமாக மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு கிரியா ஊக்கியாகவும் அவர் திகழ்ந்துகொண்டிருக்கிறார். இதனால் வைகை புயலுக்கு எப்போதுமே அழிவில்லை என்பது அவரது ரசிகர்களின் திண்ணமான நம்பிக்கை.

பிரபுதேவாவுடன் கூட்டணி: இதற்கிடையே இத்தனை வருட திரை வாழ்க்கையில் அவர் ஏகப்பட்ட ஹீரோக்களுடன் கூட்டணி வைத்து ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார். அவர்களில் முக்கியமானவர் பிரபுதேவா. இரண்டு பேரும் சேர்ந்து நடித்த காதலன், மனதை திருடிவிட்டாய் உள்ளிட்ட படங்களின் காமெடி சீன்கள் எல்லாம் இப்போதுவரை அனைவருக்குமே ஃபேவரைட். சூழல் இப்படி இருக்க மீண்டும் அவர்கள் பேங் பேங் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

பேங் பேங் திரைப்படம்: கண்ணன் ரவி தயாரிப்பில் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கியிருக்கும் அந்தப் படத்தின் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படம் இந்த வருடத்தில் ரிலீஸாகவுள்ளது. ப்ரோமோவில் வித்தியாசமான கெட்டப்பில் பிரபுதேவாவுடன் வரும் வடிவேலு ஜாம்பிக்களை துப்பாக்கியை வைத்து சுடும்படி காட்சிகள் இருக்கின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்தக் கூட்டணியை திரையில் பார்த்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது. கண்டிப்பாக காமெடி சரவெடி உண்டு என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X