Vadivelu: வடிவேலுவுக்கு ஜோடியாகும் 90ஸ் கிட்ஸ் கனவுக் கன்னி... இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே!

சென்னை: மாமன்னன் படத்தின் வெற்றிக் கூட்டணியான வடிவேலுவும் ஃபஹத் பாசிலும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 95வது படமான இதனை கிருஷ்ண மூர்த்தி என்பவர் இயக்குகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில் வடிவேலு ஜோடியாக 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் நடிகை ஒருவர் இணைந்துள்ளாராம்.

வடிவேலுவுக்கு ஜோடியாகும் 90ஸ் பிரபலம்
ரெட் கார்டு வாங்கியதால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கிய வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனாலும் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் தான் வடிவேலுக்கு சிறப்பான கம்பேக் படமாக அமைந்தது. கடந்தாண்டு ரிலீஸான இந்தப் படத்தில் வடிவேலுவுடன் உதயநிதி, ஃபஹத் பாசில் ஆகியோரும் லீடிங் ரோலில் நடித்திருந்தனர்.

 Vadivelu Pudhu Vasantham Sithara has been Paired in for Vadivelus new film

அரசியல் பின்னணியில் உருவான மாமன்னன் படத்தில் வடிவேலு தனது வழக்கமான காமெடி கலாட்டாவில் இருந்து விலகி, ரொம்பவே சீரியஸ்ஸான கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல் ஃபஹத் பாசில் ரத்னவேல் என்ற கேரக்டரில் வில்லத்தனமாக நடித்து மிரட்டியிருந்தார். வடிவேலு - ஃபஹத் பாசில் இருவருக்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் மாமன்னனில் மாஸ் காட்டிய வடிவேலு, ஃபஹத் பாசில் கூட்டணி, மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அபிஸியல் அப்டேட் நியூ இயர் ஸ்பெஷலாக வெளியானது. அதன்படி சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 98வது படமாக உருவாகும் இதனை, கிருஷ்ண மூர்த்தி இயக்குகிறார், யுவன் சங்கர் இசையமைக்கிறார்.

வடிவேலு, ஃபஹத் பாசில் இணையும் இந்தப் படம் ரோட் ட்ரிப் ஜானரில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ளது. அதாவது வடிவேலுவும் ஃபஹத் பாசிலும் ஒன்றாக பயணம் செல்வது போலவும், அப்போது நடக்கும் சம்பவங்களும் தான் படம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இப்படத்தில் வடிவேலு ஜோடியாக சித்தாரா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் சித்தாரா. தமிழில் புதுபுது அர்த்தங்கள், புது வசந்தம், புரியாத புதிர் போன்ற படங்கள் சித்தாராவுக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. ஆரம்பத்தில் நாயகியாக நடித்து வந்த அவர், பின்னர் ஹீரோக்களின் தங்கை வேடங்களில் நடித்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவா தலையா சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக சித்தாரா கமிட்டாகியுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X