இப்படியே படம் பண்ணி உடம்பை கெடுத்துக்காதீங்க.. மாரி செல்வராஜுக்கு வடிவேலு வைத்த கோரிக்கை!

சென்னை: மாமன்னன் படத்தின் 50வது நாள் வெற்றி விழா சென்னையில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர். ரஹ்மான், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் மேடை ஏறி பேசிய வடிவேலு, இதுவரை பல காமெடி படங்களில் நடித்துள்ளேன். ஆனால், அத்தனை படங்களிலும் கிடைக்காத பாராட்டு இந்த ஒத்த படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்து விட்டது என மாரி செல்வராஜை மனமார பாராட்டினார். மேலும், கடைசியாக மாரி செல்வராஜ் வேற ரூட்டில் ஒரு படம் பண்ணனும் என வடிவேலு வைத்த கோரிக்கை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Vadivelu requests Mari Selvaraj to do a comedy film and take care of his health also

6 சீன் குலைய அறுத்துடுச்சு: மாமன்னன் படத்தின் வெற்றி விழாவில் மேடை ஏறி பேசிய வடிவேலு, அந்த படத்தில் இடம்பெற்ற 6 காட்சிகள் தனது குலையையே அறுத்து விட்டதாக கூறினார். மலையில் நின்றுக் கொண்டு அழும் காட்சியை தியேட்டரில் பார்த்து அழுதேன். அங்கே வடிவேலு தெரியவில்லை, எனக்கும் மாமன்னன் தான் தெரிந்தார். வீட்டில் மனைவியின் காலை பிடித்துக் கொண்டே நான் இருக்கேன்ல பார்த்துக்கிறேன் என பேசிய காட்சிக்கு பலரும் போன் பண்ணி பாராட்டினர்.

பைக்கில் வரும் சீனில் அப்பாவுக்கும் மகனுக்கும் இருந்த அந்த உணர்ச்சி, அந்த ஒரு பைக்கே ஒரு பாலமாக நடிச்சிருக்கும். அந்த கட்டிலில் உட்கார சொல்லும் காட்சி மற்றும் கடைசியாக வெற்றி பெற்று விட்டு மகனும் அப்பாவும் பார்க்கும் காட்சி என மாரி செல்வராஜ் ஒவ்வொரு சீனையும் செதுக்கி இருப்பார்.

Vadivelu requests Mari Selvaraj to do a comedy film and take care of his health also

மாரி செல்வராஜ் காமெடி படம் பண்ணனும்: இதே ரூட்டில் சென்று மாரி செல்வராஜ் உடம்பை கெடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு காமெடி படம் ஏதாவது பண்ணி விட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க என மாரி செல்வராஜுக்கு மாமன்னன் வெற்றி விழா மேடையிலேயே வடிவேலு கோரிக்கை ஒன்றையும் வைத்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

மாரி செல்வராஜ் காட்சிகளை படமாக்கும் விதத்தில் பல முன்னணி இயக்குநர்களிடம் இருக்கும் அத்தனை திறமையும் இவருக்கு இருக்கு என்பதை தெளிவாக உணர்த்தி விட்டார். இன்னமும் பல வெற்றிப் படங்களை கொடுப்பார் என்பது உறுதியாக தெரிகிறது. இப்படியொரு படத்தை தயாரித்து நடித்த அண்ணன் உதயநிதி ஸ்டாலினுக்கும் படத்தை பிஜிஎம் மூலம் தாங்கிப் பிடித்த ஏ.ஆர். ரஹ்மானுக்கும் நன்றி கூறினார் வடிவேலு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X