கொரோனா.. இறைவன் ரிலீஸ் செய்த படம்.. வீட்டில் இருந்தே பாருங்க.. வைரலாகும் வடிவேலுவின் வீடியோ!
சென்னை: கொரோனா குறித்த பல விழிப்புணர்வு வீடியோக்களை நடிகர் வடிவேலு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
Recommended Video
இந்நிலையில், சன் டிவி வடிவேலுவிடம் பிரத்யேகமாக ஒரு பேட்டியை வாங்கி எடிட் செய்து போட்டு இருக்கிறது.

அதன் காட்சிகள் டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த வீடியோவில், இறைவன் ரிலீஸ் செய்த படம் கொரோனா என்றும், அனைவரும் வீட்டில் இருந்தே அந்த படத்தை பாருங்கள், அந்த படம் எப்போ முடியும் என்பது யாருக்கும் தெரியாது, அந்த படத்தைத் தூக்கினால் தான் நாம் நிம்மதியாக வர முடியும் என வடிவேலு பேசியுள்ளார்.
மேலும், தான் எப்போது மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என ஒரு அம்மா தன்னிடம் கேட்டதாகவும், அதற்கு, இந்த கொரோனா காலத்துல யாருமே சினிமா எடுக்கறதோ, தியேட்டருக்குப் போய் படம் பார்க்குறதோ இல்லம்மா, அப்புறம் எங்கிட்டு நான் நடிக்கிறது என நகைச்சுவையாக கூறியதையும் நினைவு கூர்ந்தார்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் விக்ராந்த், ராய் லக்ஷ்மி, வடிவேலு நடிப்பில் வெளியான கற்க கசடற படத்தில் சும்மாவே இருக்கும் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்து இருப்பார்.
இந்த கொரோனா லாக்டவுனில் பலரும் அந்த கதாபாத்திரமே மாறி வீட்டில் சும்மா இருக்க முடியாமல், தவித்து வருகின்றனர் என்றும் அந்த பேட்டியில் வடிவேலு பேசியுள்ளார்.
முன்னதாக கொரோனா குறித்த பாடல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் வடிவேலு, அடிக்கடி வெளியில் அலைந்து போலீஸ்காரர்களை தொல்லை செய்து தேவையில்லாமல் பிரம்படி வாங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











