For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நேசமணி, கைப்புள்ள, நாய் சேகர், சினேக் பாபு.. இதெல்லாம் வெறும் பெயர் அல்ல.. காமெடியின் அடையாளம்!

  |

  சென்னை: கொரோனா முதல் எந்தவொரு புதிய பிரச்சனையோ பூகம்பமோ வந்தால் கூட அதை வடிவேலுவின் காமெடி டெம்பிளேட் உடன் ஒப்பிட்டு மீமாக போட்டு வைரலாக்குகின்றனர்.

  அந்த அளவுக்கு ஏகப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து, தனது நவரச மிளகு ரச நடிப்பை எல்லாம் கொட்டித் தீர்த்தவர் நம்ம வைகைப் புயல் வடிவேலு.

  காண்ட்ராக்டர் நேசமணி, வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவன் கைப்புள்ள, நயன்தாரா எனக்குத்தான் என சொல்லும் நாய் சேகர், விஷ மருந்து அடித்தும் விழாத சினேக் பாபு என அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பெயர்கள் வெறும் பெயர்களாக இல்லாமல், தமிழ் சினிமாவின் காமெடி அடையாளமாகவே மாறிப் போனது குறிப்பிடத்தக்கது.

   வாவ்.. இதை எதிர்பார்க்கவே இல்லையே.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல இளம் நடிகை! வாவ்.. இதை எதிர்பார்க்கவே இல்லையே.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல இளம் நடிகை!

  தீப்பொறி திருமுகம்

  தீப்பொறி திருமுகம்

  இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் சத்யராஜ், நமீதா, மதுமிதா நடிப்பில் வெளியான இங்கிலீஷ்காரன் படத்தில் தீப்பொறி திருமுகமாக நடித்து வேற லெவலில் காமெடி செய்திருப்பார் நம்ம வடிவேலு. பில்டப் பண்றோமோ.. பீலா விடுறோமோ.. இந்த உலகம் நம்மை உடனே உற்றுப் பார்க்க வேண்டும் என வடிவேலு சொல்லும் பஞ்ச் வசனத்தை பேசாத ஆளே இருக்க மாட்டார்கள்.

  வக்கீல் வண்டு முருகன்

  வக்கீல் வண்டு முருகன்

  நம்ம நண்பர்கள் யாராவது நான் இப்போ வக்கில் ஆகிட்டேன் டா என சொல்லும் போது, உடனடியாக அவனை வக்கீல் வண்டு முருகன் கதாபாத்திரத்துடன் தான் கம்பேர் பண்ணி கலாய்ப்பது நடைமுறை வாழ்க்கையிலேயே நகைச்சுவை விதை நம்மிடையே வடிவேலு நட்டு விட்டார் என்பதைத் தான் உணர்த்துகிறது. அதுவும் அந்த ஜாமீன் கடலிலேயே இல்லையாம் என்ற காமெடிக்கு சிரித்தே செத்துப் போயிடலாம்.

  காண்ட்ராக்டர் நேசமணி

  காண்ட்ராக்டர் நேசமணி

  இந்த கதாபாத்திரத்தை தனியாக ஏதும் சொல்லத் தேவையில்லை. தளபதி விஜய்யின் பிரெண்ட்ஸ் படத்தை விஜய் ரசிகர்கள் அல்லாத அத்தனை தமிழ் ரசிகர்களையும் பார்க்க வைத்த பெருமை நம்ம நேசமணியைத் தான் சேரும். பிரதமர் மோடியே யாருடா.. அந்த நேசமணி என உலகளவில் டிரெண்டிங்கான பிரே ஃபார் நேசமணி ஹாஷ்டேக்கை பார்த்து மலைத்து போனாலும் போயிருப்பார்.

  கைப்புள்ள கிளம்பிட்டான்

  கைப்புள்ள கிளம்பிட்டான்

  சுந்தர்.சியின் வின்னர் படத்தையும் வடிவேலுவுக்காகத் தான் பலரும் பார்த்திருப்பார்கள். கைப்புள்ள கிளம்பிட்டான், இன்னிக்கு எத்தனை தலை உருளப் போகுதோ என கொடுக்கப்படும் பில்டப்புகளும், இன்னுமா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு என அவர் கொடுக்கும் பஞ்ச்களும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

  நாய் சேகர்

  நாய் சேகர்

  வடிவேலுவின் காமெடி வசனங்கள் எல்லாம் ஏகப்பட்ட படங்களுக்கு தலைப்புகளாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது. தலைநகரம் படத்தில் நாய் சேகர் பேசும் நானும் ரவுடி தான் வசனம் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படமாகவே மாறி ஹிட் அடித்தது. நாய் சேகரின் அந்த அழகில் மயங்கி விழுந்த அழகிகள் லிஸ்ட்டும் கொஞ்சம் அதிகம் தான்.

  சினேக் பாபு

  சினேக் பாபு

  மாதவனின் ஆர்யா படத்தில் சினேக் பாபு எனும் கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு பண்ணும் அலப்பறைகள் தான் அதகளத்தின் உச்சம். அதிலும், நடிகை பாவனா உடன் வடிவேலு கொடுக்கும் லவ் டார்ச்சர் காட்சிகள் எல்லாம் தனி ரகம். நாடி நரம்பு ரத்தம் எல்லாம் காமெடி ஊறிப் போன ஒருவரால் மட்டுமே நம்ம வடிவேலுவால் மட்டுமே அது சாத்தியம்.

  Recommended Video

  Vikram 60 • Combo Treat | Karthick Subburaj • Chiyan Vikram, Dhruv Vikram
  லிஸ்ட் பெருசு

  லிஸ்ட் பெருசு

  இப்படி வடிவேலுவின் கதாபாத்திரங்களை பற்றி சொல்லிக் கொண்டே போனால், ஒரு நாள் போதுமா.. இன்றொரு நாள் போதுமா பாட்டு பாடும் அளவுக்கு மாறிவிடும். வடிவேலு ஸ்டைலில் சொன்னால், என்ன லிஸ்ட் ரொம்ப பெருசாகுதே என சொல்லலாம். அந்த அளவுக்கு தேங்காய் கடை தேனப்பன், சூனா பாணா, செட்டப் செல்லப்பா, படித்துறை பாண்டி, என்கவுன்ட்டர் ஏகாம்பரம், பாடி சோடா, அலர்ட் ஆறுமுகம் என இந்த இம்சை அரசன் ரவுண்டு கட்டி நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நகைச்சுவை அடையாளமாக மாறியுள்ளார். மீண்டும் வரை அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. உங்கள் சேவை தமிழ் சினிமாவுக்கு தேவை!

  English summary
  Vaivelu’s character name in movies also turned as comedy symbol in tamil cinema many of his dialogues or chaged into blockbuster movies too.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X