கேட்டாலே சிரிப்பு வரும்... படத்தின் டைட்டிலாகும் வடிவேலுவின் கேரக்டர்
சென்னை : தமிழ் சினிமாவில் அனைவராலும் விரும்பப்படும் நடிகராக இருப்பவர் வடிவேலு. கடந்த 5 ஆண்டுகளாக இவர் படங்கள் எதிலும் நடிக்காவிட்டாலும், இவருக்கான இடமும் ரசிகர்கள் கூட்டமும் இருந்து கொண்டு தான் உள்ளது.
2006 ல் வடிவேலு முதல் முறையாக ஹீரோவாக நடித்த இம்சை அரசன் 23 ம் புலிகேசி படத்தின் அடுத்த பாகமாக இம்சை அரசன் 24 ம் புலிகேசியை டைரக்டர் ஷங்கர், வடிவேலுவை வைத்தே தயாரிக்க முடிவு செய்தார். அதில் ஏற்பட்ட பிரச்னையால் வடிவேலுவிற்கு ரெட் கார்டு போடும் அளவிற்கு பிரச்சனை பெரிதானது.

ஒரு வழியாக பிரச்னைகளை சமாளித்து வடிவேலு ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல் அடிபட்டது. இதில், எம்டன் மகன் படத்தை இயக்கிய திருமுருகன் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் வடிவேலுவுடன் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார்.
இதற்கிடையில் மாநகரம் படத்தை இயக்கிய சுரஜ் இயக்கும் படத்தில் நடிக்கவும் வடிவேலு ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்திற்கு 'மாநகரம்' படத்தில் வடிவேலு நடித்த 'நாய் சேகர்' என்ற கேரக்டரின் பெயரையே டைட்டிலாக வைக்க முடிவு செய்துள்ளனர்.
இதே போன்று 'மருதமலை' படத்தில் வடிவேலுக்கு மற்றொரு மறக்க முடியாத கேரக்டரான 'என்கவுன்டர் ஏகாம்பரம்' என்ற கேரக்டரை கொடுத்ததும் சுரஜ் தான். இந்த பெயரிலும் மற்றொரு படத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











