விடுமுறை கொண்டாட்டத்தில் ரிலீசாகிறதா வடிவேலுவின் கொண்டாட்டமான படம்
சென்னை : நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
வெளிநாட்டில் படத்தின் சூட்டிங்கில் கலந்து கொண்டு இந்தியா திரும்பிய வடிவேலுவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு தனது படங்களில் காமெடி கலாட்டாக்கள் மூலம் தனக்கென சிறப்பான ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். ஒரு காலகட்டத்தில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து படங்களின் வெற்றிக்கும் காரணமாக அமைந்துள்ளார்.

வடிவேலு ரீ எண்ட்ரி
ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வெற்றியை பரிசளித்துள்ளார். இதனிடையே சில காலங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது மீண்டும் தனது ரீ என்ட்ரியை துவக்கியுள்ளார். தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சிறப்பான அடுத்த இன்னிங்ஸ்
தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கவும் கதைகளை கேட்டு வருகிறார். அவரது அடுத்த இன்னிங்சை சிறப்பாக கொண்டு செல்ல முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இதற்கென ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கொரோனா பாதிப்பு
இந்நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் சூட்டிங்கிற்காக லண்டன் சென்ற வடிவேலுவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது அவர் சிறப்பாக காணப்படுகிறார். படத்தின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசை
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். சுராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தை கோடை கொண்டாட்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை ஜரூராக நடத்தி வருகிறது. விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவு பெற்று அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

கோடை கொண்டாட்டம்
படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படம் கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக கூறப்படுவது வடிவேலு ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் செய்தியாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications











