நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது!

சென்னை : நடிகர் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

தனது நடிப்பிற்கு சிறிது இடைவெளி விட்ட வடிவேலு தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் பூஜை சென்னையில் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது.

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு காமெடி கலாட்டாக்களின் ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வந்தார். அவர் நாயகனாகவும் காமெடி நடிகராகவும் தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். ஒரு காலகட்டத்தில் வடிவேலு இல்லாத படங்களே இல்லை என்ற நிலை இருந்தது.

காமெடி நாயகன்

காமெடி நாயகன்

காமெடி நாயகனாக இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தில் இவர் செய்த அட்ராசிட்டிகள் ரசிகர்களை காமெடியில் உச்சத்திற்கு கொண்டுபோனது. தொடர்ந்து தனது ரசிகர்களை காமெடி கலாட்டாக்களால் அவர் எங்கேஜ் செய்துகொண்டே இருந்தார்.

மீண்டும் நடிப்பு

மீண்டும் நடிப்பு

சில காலங்கள் அவர் நடிப்பில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியுள்ளார். இதன் மூலம் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளனர். முதல் முதலாக நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் அவர் தற்போது கமிட்டாகியுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

இந்தப் படத்தில் காமெடி நாயகனாக அவர் நடித்துள்ளார். அவரை சுற்றியும் மற்றும் சில நாய்களை சுற்றியும் படத்தின் கதைக்களம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி மற்ற நாயகர்களுடன் இணைந்து அவர் படம் செய்ய தற்போது கதைகளை கேட்டு வருகிறார்.

இரண்டாவது ரவுண்ட்

இரண்டாவது ரவுண்ட்

தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது ரவுண்டுக்கு தயாராகிவரும் வடிவேலு தற்போது பிஸியாக காணப்படுகிறார். இந்நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பூஜை சென்னையில் இன்று போடப்பட்டுள்ளது. தொடர்ந்து படத்தின் ஷூட்டிங் நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சுராஜ் இயக்கம்

சுராஜ் இயக்கம்

சுராஜ் இயக்கத்தில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு இசை அமைத்து வருகிறார் சந்தோஷ் நாராயணன். தொடர்ந்து படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு விரைவில் நடந்து முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X