‘நாய்சேகர்‘ டைட்டில் பிரச்சினை… அதிரடி முடிவெடுத்த படக்குழு!

சென்னை : நகைச்சுவை மன்னன் வடிவேலுவின் மறக்கமுடியாத கதாபாத்திரம் எது என்றால், அது தலைநகரம் திரைப்படத்தில் வடிவேலு ஏற்று நடித்த நாய் சேகர் கதாபாத்திரம் தான்.

Recommended Video

பாட்டு பாடிய வடிவேலு VaigaiPuyal Vadivelu Ultimate fun speech | Lyca Productions

இந்த படத்தில் நானும் ஜெயிலுக்கு போறேன்...ஜெயிலுக்கு போறேன் என்று கூறுவதும், நானும் ரவுடிதான் என்று வடிவேலு பேசிய வசனத்தை கேட்டு சிரிக்காதவர்களே இருக்க முடியாது.

நாய் சேகர் பெயருக்கு அவ்வளவு மவுசு... நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு நடிக்க இருக்கும் படத்திற்கு நாய்சேகர் என்று பெயர் வைத்துள்ள நிலையில், அந்த பெயர் தற்போது பிரச்சினையை இழுத்துக்கொண்டு வந்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு

நீண்ட நாட்களுக்கு பிறகு

நடிகர் வடிவேலு. அரசியல் நிலைபாடு, இயக்குநர் ஷங்கருடனான மோதல்போக்கு, கால்சீட் பிரச்சனை போன்றவை காரணமாக நீண்ட காலமாக திரைப்படங்களில் நடிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.

சுராஜ் இயக்கத்தில்s

சுராஜ் இயக்கத்தில்s

வடிவேலுவுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு அண்மையில் திரும்ப பெறபட்டது. இதையடுத்து, புது உற்சாகத்தில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வடிவேலு தயாராகி வருகிறார்.இவர் சுராஜ் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் உருவாகும் நாய்சேகர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

நாய்சேகர்

நாய்சேகர்

இது தொடர்பாக அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஒரு செய்தியாளர் ஏஜிஎஸ் நிறுவனம் காமெடி நடிகர் சதீஷை வைத்து நாய் சேகர் என்ற படத்தை தயாரித்து வருவதாக கூறினார். இதற்கு பதிலளித்த சுராஜ், நாய் சேகர் என்றாலே வடிவேலுதான் நினைவுக்கு வருவார். அதனால் எப்படியும் அந்த நிறுவனம் நாய் சேகர் டைட்டிலை வடிவேலுவுக்கு விட்டுத் தருவார்கள் என்று நம்பப்படுவதாக கூறினார்.

டைட்டில் பிரச்சினை

டைட்டில் பிரச்சினை

இந்நிலையில், வடிவேலு தரப்பினர் நாய்சேகர் டைட்டிலை விட்டுக் கொடுக்கும் படி ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், ஏஜிஎஸ் நிறுவனம் படம் பாதி அளவுக்கு முடிந்துவிட்டதாக கூறி பேச்சுவார்த்தையை தட்டிக்கழித்துள்ளனர். இதனால், சுராஜ் வடிவேலு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு நாய் சேகர் தலைப்பு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாய்சேகர் ரிட்டன்ஸ்

நாய்சேகர் ரிட்டன்ஸ்

இதையடுத்து, படக்குழுவினர் அதிரடி முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன் படி நாய் சேகர் டைட்டில் கிடைக்காததால் வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற தலைப்பு வைக்கப்பட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X