நவம்பரில் வெளியாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. வடிவேலுவின் வேற லெவல் திட்டம்!
சென்னை : நடிகர் வடிவேலு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் அவர் நாயகனாக நடித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்தப் படத்தின்மூலம் வடிவேலு மீண்டும் தன்னுடைய காமெடி பயணத்தை துவங்கியுள்ளார்.
தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களிலும் கமிட்டாகி வடிவேலு நடித்து வருகிறார்.

நடிகர் வடிவேலு ரீ-என்ட்ரி
நடிகர் வடிவேலு என்றாலே காமெடி கிங் என்றுதான் அர்த்தம். அவரது நடிப்பில் வெளியான அனைத்துப்படங்களும் இயக்குநர்களுக்கு வெற்றிப் பாதைக்கு வழி காட்டின. சாதாரண நாயகனை வைத்து ஒரு படத்தை இயக்கினாலும் அந்தப் படத்தில் வடிவேலுவை நடிக்க வைத்துவிட்டால் படத்தை வெற்றிப் படமாக்கி விடலாம் என்ற மனநிலை இயக்குநர்களுக்கு ஒரு காலகட்டத்தில் இருந்தது.

சிறப்பான உடல்மொழி
இந்த மனநிலை சரியானதுதான் என்று பல படங்களில் நிரூபித்தார் வடிவேலு. தன்னுடைய உடல்மொழி மூலமும் டைமிங் காமெடி சென்ஸ் மூலமும் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். பிரபல நாயகர்களுக்கு இணையாக தன்னுடைய கேரக்டரும் படத்தில் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். தன்னுடைய காமெடியால் ரசிகர்களை கட்டிப் போட்டார்.

நடிப்பிலிருந்து ஒதுங்கிய வடிவேலு
இதனிடையே சில தவிர்க்க முடியாத காரணங்களால் சில காலங்கள் இவர் நடிப்பிலிருந்து விலகியிருந்தார். ஆனாலும் தொலைக்காட்சிகளில் இவரது காமெடி இடம்பெறாத பொழுதுகளே இல்லை என்னும் நிலைமை காணப்பட்டது. திரையரங்குகளில் வடிவேலுவை பார்க்க முடியாதவர்கள், தொலைக்காட்சிகளில் பார்த்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

வடிவேலுவின் ரீ-என்ட்ரி
இதனிடையே தற்போது வடிவேலு மீண்டும் திரையில் தனது என்ட்ரியை கொடுத்துள்ளார். வடிவேலு காமெடி களத்தில் நாயகனாக களமிறங்கியுள்ள படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இந்தப் படத்தில் வடிவேலுவுடன் நாய் ஒன்றும் சிறப்பான தோற்றத்தில் நடித்துள்ள நிலையில், படத்தை பிரபல இயக்குநர் சுராஜ் இயக்கியுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்
இதனிடையே உதயநிதியுடன் மாமன்னன், ராகவா லாரன்சுடன் சந்திரமுகி 2 ஆகிய படங்களிலும் மீண்டும் தனது காமெடி பயணத்தை துவக்கியுள்ளார் வடிவேலு. அவரது ரி என்ட்ரியை பார்க்க தற்போதே ரசிகர்கள் தயாராகி வருகின்றன. இதனிடையே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

நவம்பரில் வடிவேலு படம் ரிலீஸ்?
இந்தப் படத்தை நவம்பரில் ரிலீஸ் செய்ய வடிவேலு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தீபாவளியையொட்டி சர்தார், பிரின்ஸ் படங்கள் வெளியாகவுள்ளன. இதேபோல பொங்கலுக்கு வாரிசு, துணிவு, மெகா154, ஆடிபுருஷ் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளன. இதனிடையே நவம்பரில் அதிகமான படங்கள் ரிலீசாகாத நிலையில், அந்த நேரத்தில் தன்னுடைய படம் வெளியானால் ரசிகர்களை அதிகமாக கவரும் என்று அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











