வடிவேலு மூஞ்சியில் பூரான் விட்டது யாருப்பா... உதயநிதி ஸ்டாலினா இது... மிரட்டும் மாமன்னன் போஸ்டர்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் இன்று (ஜூன் 16) மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் லீடிங் கேரக்டரில் நடித்துள்ளனர்.
முக்கியமாக மாமன்னன் தான் உதயநிதியின் கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாமன்னன் ட்ரெய்லர் அப்டேட் போஸ்டரில் இடம்பெற்றுள்ள வடிவேலு, உதயநிதி புகைப்படங்கள் ரசிகர்களை மிரட்டியுள்ளது.

டெரர் லுக்கில் வடிவேலு:பரியேறும் பெருமாள், கர்ணனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 3வது படம் மாமன்னன். இந்தப் படத்தில் முதன்முறையாக உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஏஆர் ரஹ்மான் என மெஹா கூட்டணியுடன் இணைந்துள்ளார் மாரி செல்வராஜ். இவர்கள் தவிர லால், கீர்த்தி சுரேஷ், விஜயகுமார் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர்.
இதுவரை காமெடி கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த வடிவேலு, மாமன்னன் படத்தில் யாரும் பார்த்திடாத பெர்ஃபாமன்ஸ் செய்துள்ளாராம். இந்தப் படம் வடிவேலுவுக்கு தரமான ரீ-என்ட்ரியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், உதயநிதி ஸ்டாலினுக்கு மாமன்னன் தான் கடைசிப் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி நடந்து முடிந்தது.
அதனைத் தொடர்ந்து மாமன்னன் பட பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதன் தொடர்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. இதனைமுன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ஒரு பாதியில் உதயநிதியின் முகமும், இன்னொரு பாதியில் வடிவேலுவின் முகமும் உள்ளது. முக்கியமாக இருவரது முகத்தையும் சேர்த்து தையல் போடப்பட்டுள்ளது.

உதயநிதி, வடிவேலு இருவருமே செம்ம சீரியஸ்ஸாக டெரர் லுக்கில் கலங்கடிக்கின்றனர். அதிலும் வடிவேலுவின் முகமும் அந்த பார்வையும் இதுவரை யாரும் பார்த்திடாத வகையில் படு மிரட்டலாக உள்ளது. போஸ்டரே இப்படி என்றால், மாமன்னன் ட்ரெய்லரும் படமும் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். வழக்கமாக திருநெல்வேலியை பின்னணியாகக் கொண்டு படம் இயக்கும் மாரி செல்வராஜ், இம்முறை சேலம் பகுதியை தேர்தெடுத்துள்ளார்.
இதனால், மாமன்னன் படத்தில் மேற்கு மாவட்ட சாதிய அரசியல் குறித்து மாரி செல்வராஜ் பேசியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியாகும் மாமன்னன் ட்ரெய்லரில் படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிக்க வாய்ப்புள்ளது. அதன்படி இந்தப் படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வரும் 29ம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications