நடிகைகளிடம் அத்துமீறிய ரவுடி கும்பல்.. உள்ளே புகுந்து வெளுத்த வடிவேலு.. வைகை புயலின் இன்னொரு பக்கம் இதுதான்

சென்னை: வடிவேலு சில பிரச்னைகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் நடித்த கேங்கர்ஸ், மாரீசன், மாமன்னன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு இருக்கும் ரெஸ்பான்ஸ் இன்னும் குறையவில்லை என்பதை நிரூபித்தன. அடுத்ததாக பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். மேலும் கார்த்தி நடிக்கும் மார்ஷல் படத்திலும் முக்கியமான ரோலை ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் செய்த தரமான சம்பவத்தை இதில் பார்க்கலாம்.

வைகை புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் வடிவேலுவை மறந்துவிட்டு தமிழ் சினிமாவின் போக்கை எழுதவோ, நினைக்கவோ முடியாது. எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்து முன்னணி காமெடி நடிகராக மாறியவர் அவர். பல காமெடி நடிகர்கள் அடுத்தவர்களை கிண்டல் செய்து காமெடி செய்த சூழலில்; இவர் தன்னைத்தானே தாழ்த்துக்கொண்டு மற்றவர்களை சிரிக்க வைத்தது அவரை அனைவரிடமும் கொண்டு போய் சேர்த்தது. ஒருகாலத்தில் வடிவேலு இருந்தால் போதும் அந்தப் படம் ஹிட்டாகிவிடும் என்ற நிலைமைதான் இருந்தது.

வடிவேலுவுக்கு வந்த பிரச்னைகள்: அவரது வளர்ச்சி நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. ஆனால் அவர் ஏறிய அரசியல் மேடை அவரது வளர்ச்சியை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்றது. விஜயகாந்த்தை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் அவர் பேசிய அநாகரீக பேச்சுக்கள் எல்லாம் அவருக்கே ஆப்பு வைத்தன. கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டு; ஒருகட்டத்தில் பட வாய்ப்புகளே இல்லாமல் ஆக்கப்பட்டார். இதனால் இனிமேல் வடிவேலு கதை அவ்வளவுதான் என பலரும் சொன்னார்கள்.

Vadivelu s Real-Life Hero Moment Actor Allegedly Fights Rowdies to Protect Co-Actresses
Photo Credit:

இரண்டாவது இன்னிங்ஸில் வடிவேலு: ஆனால் நல்வாய்ப்பாக அவரை சுற்றி இருந்த பிரச்னைகள் எல்லாம் முடித்து வைக்கப்பட்டன. அதனையடுத்து மீண்டும் நடிக்க ஆரம்பித்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2, மாரீசன், கேங்கர்ஸ் ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் மாமன்னனும், மாரீசனும் சூப்பர் ரெஸ்பான்ஸை அவருக்கு பெற்றுக்கொடுத்தன. அடுத்ததாக பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். கார்த்தியுடன் மார்ஷல் படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.

வடிவேலுவின் இன்னொரு பக்கம்: இந்நிலையில் வடிவேலு செய்த தரமான சம்பவம் குறித்து பார்க்கலாம். அதாவது ஒரு படத்தில் மணிவண்ணனுடன் சேர்ந்து வடிவேலு நடித்துக்கொண்டிருந்தார். அவர்களுடன் துணை நடிகைகளும் நடித்தார்கள். பெட்ரோல் பங்க்கில்தான் ஷூட்டிங் நடந்திருக்கிறது. அந்த சமயத்தில் அங்கே இருந்த இளைஞர்கள் சிலர்; அந்த நடிகைகளிடம் அத்துமீறி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். உடனே அவர்கள் தயாரிப்பாளர்களிடம் வந்து முறையிட; படத்தின் தயாரிப்பாளர் அந்த இளைஞர்களை தாக்கிவிட்டார்.

தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்கள் அங்கிருந்து சென்று சிறிது நேரம் கழித்து ஒரு ரவுடி கும்பலோடு வந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்திருக்கிறார்கள். அப்போது கொதிப்படைந்த வடிவேலு, உள்ளே புகுந்து அந்த கும்பலை பயங்கரமாக தாக்க ஆரம்பித்துவிட்டாராம். இதை பார்த்த மணிவண்ணனோ, அய்யோ வடிவேலு நீ ஏன் போற; நீ ஒரு செலிபிரிட்டி எல்லோரும் அடையாளம் கண்டுபிடித்துவிடுவார்கள். நீ அடிக்கக்கூடாது என சொல்லி தடுக்க பார்த்தாராம். கோபம் குறையாத வடிவேலு தொடர்ந்து அந்த ரவுடி கும்பலை அடித்துவிட்டுத்தான் அங்கிருந்து வெளியே வந்தாராம். காமெடி செய்து சிரிக்க வைக்கும் வடிவேலு அடிப்படையில் பயங்கர சம்பவக்காரராக இருந்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X