வடிவேலுவின் தெனாலிராமன்... இறுதிக் கட்டத்தில் படப்பிடிப்பு!

By Shankar

சென்னை: வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

வடிவேலு இரு வேடங்களில் நடிக்க., மீனாட்சி தீக்ஷித், ராதாரவி, மனோபாலா உள்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் படம் ஜெகஜ்ஜால புஜபல தெனாலி ராமன்.

Vadivelu's Tenaliraman shooting at its final stage

வடிவேலுவுக்கு இது வாழ்க்கையில் மறக்க முடியாத மறுபிரவேச படம். இந்தப் படத்தில் ஜெயித்தே தீர வேண்டிய கட்டாயம். இல்லாவிட்டால் வடிவேலு என்ற நடிகனை நிர்ந்தரமாக முன்னாள் நடிகராக்கிவிடும் அபாயம் உள்ளது.

வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்தை பார்த்துப் பார்த்து உருவாக்கி வருகிறாராம் இயக்குநர் யுவராஜ் தயாளன்.

ஆரூர்தாஸ் வசனங்களை எழுதியுள்ளார். இமான் இசையமைத்துள்ளார். புலவர் புலமைப்பித்தன், விவேகா பாடல்களை எழுதியுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் இசையை வெளியிட்டுவிட திட்டமிட்டுள்ளனர்.

ராஜா ராணி காலப் படமென்பதால், நிஜ அரண்மனை மாதிரியே செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். குற்றாளம், அச்சன்கோவில், புதுச்சேரி போன்ற இடங்களில் வெளிப்புறப் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் கூடவே நடத்தி வருகின்றனர்.

இதுவரை வந்த வடிவேலு படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாரான படம் என்றால் அது இந்த தெனாலிராமன்தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X