ரஜினியோடு மோதவில்லை வடிவேலு... ஏப்ரல் 18ம் தேதி ரிலீசாகிறது ‘தெனாலிராமன்’
சென்னை: நடிகர் வடிவேலு வித்தியசமான தோற்றத்தில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் தெனாலி ராமன் திரைப்படம் ஏப்ரல் 18ம் தேதி ரிலீஸாகிறதாம்.
2011ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு வடிவேலு நடிப்பையே விட்டு விட்டார். காரணம் தேர்தல் பிரசாரத்தின்போது அவர் அதிமுக கூட்டணிக்கு எதிராக குறிப்பாக விஜயகாந்த்துக்கு எதிராக கடுமையான பிரசாரம் மேற்கொண்டார்.
அத்தேர்தலில் அதிமுக ஜெயித்து ஆட்சியமைத்து விட்டதால் வடிவேலுவை வைத்துப் படம் செய்ய பலரும் தயங்கினர். வடிவேலுவும் கூட அதற்காக அலட்டிக் கொள்ளாமல் ரெஸ்ட் எடுக்கப் போய் விட்டார்.
இந்த நிலையில்தான் மீண்டும் தெனாலி ராமன் படம் மூலம் தனது நடிப்பை மறுபடியும் தொடங்கியுள்ளார் வடிவேலு.

தெனாலி....
முழு நீளக் காமெடிப் படமாக உருவாகியுள்ளது தெனாலி ராமன். இது தெனாலி ராமன் கதையாகும்.

ஏப்ரல் மாதம்...
ஏப்ரல் மாதம் படத்தைத் திரைக்குக் கொண்டு வருகிறார்களாம். இதை படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளன் உறுதி செய்துள்ளார்.

ரிலீஸ் தள்ளிவைப்பு...
பட ரிலீஸ் குறித்து யுவராஜ் தயாளன் கூறுகையில், எங்களது படம் ஏப்ரல் 18ம் தேதி படம் திரைக்கு வருகிறது. முன்பு ஏப்ரல் 11ம் தேதி திரையிடத் திட்டமிட்டிருந்தோம். தற்போது ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளோம் என்றார்.

இரட்டை வேடம்...
தெனாலி ராமன் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளாராம் வடிவேலு.

மற்றும் பலர்...
படத்தில் நாயகியாக மீனாட்சி தீகஷித் நடித்துள்ளார். மேலும் மனோபாலா, ராதாரவி, ஜி.எம்.குமார், பாலாசிங், மன்சூர் அலகான், தேவதர்ஷினி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











