twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ராணாவோ காணாவோ...' - வடிவேலு நாக்கில் வந்து உட்கார்ந்த சனி!!

    By Shankar
    |

    vadivelu and karunanidhi
    ரஜினியின் ராணா படத்திலிருந்து காமெடியன் வடிவேலு நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் கஞ்சா கருப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    நடந்து முடிந்த தேர்தலின்போது, திமுகவின் பிரச்சார பீரங்கியாகப் பார்க்கப்பட்டார் வடிவேலு. இந்த பீரங்கி திமுகவின் கொள்களைப் பரப்பியதோ இல்லையோ, விஜயகாந்த் மீது சகதியை வாரிக் கொட்டியது.

    ஜெயலலிதாவை மருந்துக்கும் தாக்கிப் பேசவில்லை. திரையுலகினருக்கு வடிவேலுவின் பேச்சு கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

    இந்த நிலையில் தனது ராணா படத்துக்கு வடிவேலுவை ஒப்பந்தம் செய்து வைத்திருந்த ரஜினி, படம் துவங்கும் நேரத்தில் திடீரென்று நீக்கிவிட்டார். அவருக்குப் பதில் கஞ்சா கருப்புவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

    திமுக வெற்றி உறுதி...

    இந்த நிலையில், முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்துப் பேசினார் வடிவேலு. இச் சந்திப்பின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடனிருந்தார்.

    அப்போது வடிவேலுவைச் சூழந்து கொண்ட நிருபர்கள், சந்திப்பின் நோக்கம் குறித்துக் கேட்டனர்.

    அதற்கு பதிலளித்த வடிவேலு, "திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கருத்துக்கணிப்புகளை விட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும். கடந்த 5 ஆண்டு காலத்தில் பயன் அடைந்தோர் பட்டியல் அதிகமாக இருப்பதால், கலைஞர் அய்யாவின் வெற்றி உறுதி. மக்களின் எழுச்சியை நான் பார்த்தேன்.

    பிரச்சாரத்தில் 108 ஆம்புலன்ஸ் நுழைந்து போகும்போது மக்கள் ஆரவாரம் செய்தனர். குழந்தைகள் முட்டையை கையில் எடுத்து வந்து காட்டியது போன்றவைகளையெல்லாம் பார்க்கும்போது பயன் அடைந்தவர்கள் ஓட்டே திமுக கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பை பெற்று தரும். ஏழை எளிய மக்கள் தங்களது நன்றி கடனை செலுத்தியுள்ளனர். இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதற்காக கலைஞர் அய்யாவை இன்று நான் சந்தித்தேன்," என்றார்.

    ராணாவோ காணாவோ...

    விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ராணா படத்தில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறதே? என்று கேட்டதற்கு,

    "ராணா படமாக இருக்கட்டும், காணா படமாக இருக்கட்டும், இல்ல வேற எந்தப் படமாக இருந்தாலும் என்னை தூக்குவதைப் பத்தி நான் கவலைப்படவே இல்லை.

    மக்களைச் சென்றடைந்த திட்டங்களை பற்றித்தான் நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இது ஒரு தவறா... இதுக்காக என்னை சினிமாவைவிட்டே தூக்கினாலும், அல்லது தூக்காவிட்டாலும் அதைப்பற்றி கவலைப்படமாட்டேன். வரும் 13ம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும். காட்சிகள் மாறும். அப்போ பேசிக்கிறேன்," என்றார் வடிவேலு.

    அதிமுகவுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்ததுதான் அதற்கு பின்னடைவு என்று கூறுகிறீர்களா? என்று கேட்டதற்கு,

    பொறுத்து இருந்து பாருங்கள். கலைஞரிடம் தோற்பதற்கு காத்திருப்பவர்கள் எத்தனை பேர் என்பது அப்போது தெரியும் என்றார்.

    English summary
    Rajinikanth has dropped ace comedian Vadivelu from his film Rana and gave that opportunity to Ganja Karuppu. Reacting this Vadivelu told that he never bother about these minor things and hoped things would be changed after 13th May.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X