வைகை புயலின் அசத்தல் நடனம்.. இளம் தேவதைகளுடன் செல்ஃபி!
சென்னை : வைகை புயல் வடிவேலு, சன் குடும்ப விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ஆட்டம் ஆடி அசத்தினார். சன் டிவியின் இளம் நடிகைகள் மேடையில் ஏறி வடிவேலுவுடன் செல்பி எடுத்து கொண்டனர் .
நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் மிக முக்கிய காமெடியன். அவர் இல்லை என்றால் தமிழ்சினிமா வரலாற்றில் பல ஆண்டுகளுக்கு நகைச்சுவை கிடையாது. அந்த அளவுக்கு சினிமாதுறையில் இவரின் பங்கு மிக பெரியது . தற்போது படங்களில் நடிப்பதை மிகுதியாக குறைத்து இருக்கிறார் வடிவேலு . கடைசியாக வடிவேலு மெர்சல் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நகைச்சுவை நிறைந்த குணசித்திர பாத்திரத்தில் நடித்து இருப்பார்.

தற்போது நடிகர் வடிவேலு சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற நட்சத்திர கலை விழாவான சன் குடும்பம் விழாவில் கலந்து கொண்டார் .இந்த விழா வருடாவருடம் சன் தொலைக்காட்சி சார்பாக நடத்தபட்டு வருகிறது. இந்த விழாவில் சன் தொலைகாட்சியின் நாடக தொடரில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள், டெக்னிசன்கள் ஆகியோரை தேர்ந்தெடுத்து கௌரவிக்கும் விதமாக விருது வழங்கப்படும்.
இந்த விழாவில் மூத்த நாடக நடிகைகளான ராதிகா சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குஷ்பு மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வடிவேலு பேச வரும்போது சன் தொலைகாட்சியின் முக்கிய நடிகைகளான 18 இளம் நடிகைகள் மேடையில் ஏறி வடிவேலுவுடன் செல்பி எடுத்து கொண்டனர் .

அப்போது பேசிய நடிகை நட்சத்திரா, வடிவேலுவை புகழ்ந்து பேசினார் ,அதில் நாங்கள் எப்போதும் சூட்டிங் போது வடிவேலுவின் வசனங்களை பேசி தான் கமென்ட் அடிச்சி சிரிப்போம். அதே போல எதாச்சும் சொல்ல வேண்டும் என்றால் கூட அங்கு வடிவேலு வசனங்களை பயன்படுத்தி கொள்வோம் மேலும் வடிவேலு சினிமாவில் இடைவெளி எடுத்து விட்டதாக சிலர் கூறுகின்றனர் அது பொய் நாங்கள் தினமும் அவரை பற்றி தான் பேசுகிறோம் என்று கூறினார் .
நடிகை நட்சத்திரா சில படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது குஷ்புவுடன் லஷ்மி ஸ்டோர்ஸ் என்ற நெடுந்தொடரில் நடித்து வருகிறார். அதே சமயத்தில் குறும்படங்களில் நடிப்பது மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என்று எப்போதும் பிசியாக இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் மூத்த நடிகைகளை பற்றி பாடல் பாடுங்கள் என்று கேட்டதற்கு வடிவேலு அவர்கள் எனக்கு முன்னால் சினிமாதுறைக்கு வந்தவர்கள் அவர்களுக்கு நான் பாடல் பாட இயலாது அவர்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே எனக்கு பெருமை என்று கூறினார் .
இந்த நிகழ்ச்சியில் இளம் நடிகைகளுடன் சேர்ந்து தனது நகைச்சுவையான நடனங்களையும் ஆடினார் வடிவேலு . தற்போது வடிவேலு கதாநாயகனாக பேய் மாமா படத்தில் நடித்து வருகிறார். மேலும் கமலின் தலைவன் இருக்கிறான் படத்திலும் நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











