மலையாள படத்தில் நடித்தது போன்று இருந்தது.. மாரீசன் அனுபவம் பகிரும் வடிவேலு

சென்னை: வடிவேலு, ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியிருக்கும் மாரீசன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நேற்று திரையிடப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான காட்சியில் படத்துக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கும் சூழலில்; நடிகர் வடிவேலு மாரீசன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்திருக்கிறார்.

வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்ஸில் படு பிஸியாக நடித்துவருகிறார். அவர் ரீ என்ட்ரி கொடுத்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தாலும்; அடுத்ததாக அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. நடிப்பு அசுரன் என புகழப்படும் ஃபகத் பாசிலுடன் சேர்ந்து வடிவேலு வேறு ஒரு பரிமாணத்தில் நடித்து அப்ளாஸை அள்ளினார். ரசிகர்களும் வடிவேலுவுக்கு இது லைஃப் டைம் ரோல் என்று புகழ்ந்தார்கள்.

மாரீசன் வடிவேலு: சூழல் இப்படி இருக்க அவர் தற்போது சுதீஷ் இயக்கத்தில், கிருஷ்ணமூர்த்தி எழுதிய கதையான மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதிலும் அவருடன் ஃபகத் பாசில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் மாமன்னன் படத்தில் நடித்து ஹிட்டாகியிருப்பதால்; இப்படத்தில் அவர்களது கெமிஸ்ட்ரியை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லருக்கும் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Vadivelu Shares About Maareesan Movie Experience Here are Full Details
Photo Credit:

பத்திரிகையாளர் காட்சி: படமானது நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களுக்கென பிரத்யேகமாக படம் திரையிடப்பட்டது. அதனைப் பார்த்த பத்திரிகையாளர்கள் பெரும்பாலானோர் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகிறார்கள். மாமன்னன் போன்றே இதிலும் வடிவேலு - ஃபகத் பாசில் காம்போ கலக்கிவிட்டது; கண்டிப்பாக படம் சூப்பர் ஹிட்டடிக்கும் என்று தத்தமது எக்ஸ் பக்கத்தில் அவர்கள் பதிவிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனும் படத்தை பார்த்துவிட்டு ஏகத்துக்கும் பாராட்டியிருக்கிறார்.

வடிவேலுவின் பேட்டி: இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டியளித்த வடிவேலு மாரீசன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "என்னிடம் ரைட்டர் வந்து இந்தக் கதையை சொன்னபோது அந்தக் கதைக்குள்ளேயே என்னால் போக முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவரிடம் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த அளவுக்கு கதை எனக்கு பிடித்திருந்தது. இன்னொரு நடிகர் யார் என்று அவரிடம் கேட்டேன்.

ஃபகத் பாசில் என்றதும் சந்தோஷம்: அதற்கு அவரோ இரண்டு நாட்கள் கழித்து சொல்கிறேன் என கூறிவிட்டு சென்றுவிட்டார். மீண்டும் வந்த அவர் ஃபகத் பாசில் நடிக்கிறார் என சொன்னார். அது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது. இந்தப் படம் இப்போதைய காலகட்டத்துக்கு தேவையான விழிப்புணர்வை கொடுக்கக்கூடிய படமாக வந்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தபோது ஒரு மலையாள சினிமாவில் நடிப்பதுபோல்தான் எனக்கு இருந்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X