சிக்கலில் வடிவேலு, சிம்பு, த்ரிஷா... ரெட் போடத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்
Recommended Video

சென்னை - த்ரிஷா, வடிவேலு மற்றும் சிம்பு ஆகிய நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
இதனை ஈடு செய்யாவிட்டால் மூவர் மீதும் படங்களில் நடிக்கத் தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

விலகிய மாமி
இயக்குநர் ஹரியின் சாமி ஸ்கொயர் படத்திலிருந்து பாதியில் விலகிக் கொண்டார் த்ரிஷா. காரணம், தான் எதிர்ப்பார்த்த மாதிரி ஸ்க்ரிப்ட் இல்லை என்று கூறியிருந்தார். இதனால் பல காட்சிகளை இயக்குநர் ரீஷூட் பண்ண வேண்டியுள்ளது. இதனால் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸுக்கு எக்கச்சக்க நஷ்டம். இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஷிபு தமீன்ஸ் புகார் தர, த்ரிஷா மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தி இம்சை அரசன்
அடுத்து வடிவேலு. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம், ஆரம்பிக்கப்பட்ட வேகத்திலேயே நிறுத்தப்பட்டது. காரணம் நிஜத்திலும் இம்சை அரசனாக வடிவேலு மாறியதுதான். வாங்கிய அட்வான்சை திருப்பித் தருமாறு வடிவேலுவிடம் கேட்டுள்ளார் ஷங்கர். கவுன்சிலில் புகாரும் கொடுத்துவிட்டார். கூடவே படம் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட இழப்பையும் தரச் சொல்லியிருக்கிறார். இந்த பஞ்சாயத்தும் தயாரிப்பாளர் சங்கத்தின் கைக்கு வந்துள்ளது.

சிம்பு
கடைசியாக சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன். இந்தப் படத்தின் ஷூட்டிங்குக்கு சிம்பு சரியாக வரவில்லை என்பது குற்றச்சாட்டு. ஒரே மூச்சில் இரண்டு பாகங்களாக எடுக்க வேண்டிய அஅஅ படத்துக்கு வெறும் 29 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்தாராம் சிம்பு. அரைகுறையாக வெளியான படம் ரூ 18 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இழப்பீடு
இந்த மூன்று நடிகர்களால் மூன்று பெரிய தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மூவர் மீதும் கட்டாயம் நடவடிக்கை வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதால் தயாரிப்பாளர் சங்கம் ஒரு முடிவை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு த்ரிஷா, வடிவேலு மற்றும் சிம்பு உரிய இழப்பீட்டைத் தரவேண்டும். இல்லாவிட்டால் குறிப்பிட்ட காலத்துக்கு தொழில் தடை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











