என்னது நாய் சேகரில் வடிவேலு trap சாங் பாடுறாரா? சந்தோஷ் நாராயணன் ஷேர் பண்ண செம சம்பவம்!

சென்னை: நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் என மீண்டும் வெள்ளித்திரையில் செம கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் வைகைப் புயல் வடிவேலு.

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வரும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் லண்டனுக்கு எல்லாம் சென்று செம வித்தியாசமாக இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், நாய்சேகர் படத்திற்காக காமெடி லெஜண்ட் வடிவேலு ஒரு டிராப் சாங் பாடியிருக்கும் அட்டகாசமான தகவலை வீடியோவுடன் போட்டு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

வடிவேலு ரிட்டர்ன்ஸ்

வடிவேலு ரிட்டர்ன்ஸ்

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வடிவேலு ரிட்டர்ன் ஆகிறார். வடிவேலுவின் என்ட்ரியை பெரிய திரையில் காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டாலும், நாள்தோறும் திரும்பும் இடமெல்லாம் மீமாக வந்து எனக்கு எண்டே கிடையாது என கெத்துக் காட்டியவர் வடிவேலு.

கீர்த்தி சுரேஷுடன்

கீர்த்தி சுரேஷுடன்

நடிகர் வடிவேலுவுக்கு நாய்சேகர் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடி என்று பேச்சுவார்த்தைகள் எழுந்தன. அது வெறும் வதந்தி என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், நிஜமாவே வடிவேலு கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கப் போகிறார். உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மாரி செல்வராஜ் அந்த படத்தை இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஷிவானி நடிக்கிறாரு

ஷிவானி நடிக்கிறாரு

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியே இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில், பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் வடிவேலுவுடன் இணைந்து நடித்து வருவதாக தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி உள்ளார்.

டிராப் சாங்

டிராப் சாங்

லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வரும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்காக பிரத்யேகமாக லண்டனில் ஒலிப்பதிவை நடத்தினார் சந்தோஷ் நாராயணன். இந்நிலையில், வடிவேலு இந்த படத்தில் டிராப் சாங் ஒன்றை பாடப் போவதாகவும் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

டிராப் சாங் என்றால் என்ன?

டிராப் சாங் என்றால் என்ன?

ராப் பாடல், ஹிப் ஹாப் பாடல் என ஏகப்பட்ட பாடல் பிரிவுகள் உள்ள நிலையில், டிராப் சாங் என்ற ஒரு பிரிவும் 1990 முதல் புழக்கத்தில் இருந்து வருகிறது. 2000ம் ஆண்டு தான் அந்த பாடல் மிகவும் பிரபலமானது. பாடாமல் வசனம் படிப்பது போல இருக்கும் அந்த பாடல் ஆடத்தூண்டும் இசையுடன் சேர்ந்து உருவாகி இருக்கும். அப்படியொரு டிராப் பாடலைத் தான் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்காக வடிவேலு பாட உள்ளார்.

ஏகப்பட்ட பாடல்கள்

ஏகப்பட்ட பாடல்கள்

வைகைப்புயல் வடிவேலு எட்டணா இருந்தா, வாடி பொட்ட புள்ள வெளியே, சந்தன மல்லிகையில் என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தி உள்ளார். இந்நிலையில், நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் ரிட்டர்ன் ஆக உள்ளார் வடிவேலு என்பது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X