Vadivelu - சிரிக்கக்கூடாதுனு கண்டிஷன் போட்டார் மாரி செல்வராஜ்.. வடிவேலு ஷேரிங்ஸ்

சென்னை: Vadivelu (வடிவேலு) மாமன்னன் ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை சிரிக்கக்கூடாது என மாரி செல்வராஜ் கண்டிஷன் போட்டதாக வடிவேலு பேசியிருக்கிறார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மெகா ஹிட்டாகியிருக்கிறது படம். படம் வெளியாகி ஒன்பது நாட்களில் 52 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் வெற்றி விழா மேடையில் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

Vadivelu Speech in Maamannan Success Meet

அப்ளாஸ் அள்ளிய வடிவேலு: மாமன்னன் படம் வெளியாவதற்கு முன்னதாகவே இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ஒவ்வொரு பேட்டியிலும் வடிவேலு இதில் வழக்கமான வடிவேலுவாக இருக்கமாட்டார். அவர்தான் மாமன்னன். நிச்சயம் இந்தப் படம் அவரது இன்னொரு முகத்தை காட்டும் என கூறினார். அதனை நிரூபிக்கும் விதமாகவே வடிவேலுவின் நடிப்பு இருந்து ரசிகர்களிடம் அப்ளாஸை அள்ளியது.

குறிப்பாக மகனிடம் குற்ற உணர்ச்சியில் குறுகுவது, சாதி திமிர் பிடித்த ஃபகத்தின் முன்பு அச்சத்தோடு அமர்வது என ஒவ்வொரு ஃப்ரேமிலும் தான் எவ்வளவு மிகச்சிறந்த நடிகன் என்பதை உணர்த்தியிருக்கிறார் வடிவேலு. இந்தச் சூழலில் மாமன்னன் படத்தின் வெற்றிவிழா நேற்று மாலை சென்னையில் நடந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வடிவேலு பேச்சு: விழாவில் பேசிய வடிவேலு: "இதுவரை காமெடி நடிகனாக மட்டுமே நடித்தேன். ஆனால் இந்தப் படம் வேறு மாதிரியானது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் கமிட்டாகியிருந்த நேரம். அப்போது, இப்படி ஒரு படம் பண்ணலாம் என்று உதயநிதி சொன்னார். படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார் என்றார். அவர் படம் பார்த்துள்ளீர்களா? என கேட்டார். இல்லை என்றேன். உடனே அன்று இரவே மாரி செல்வராஜின் இரண்டு படங்களையும் பார்த்துவிட்டேன்.

Vadivelu Speech in Maamannan Success Meet

மாமன்னன் மாரி செல்வராஜ்: அடுத்த நாள் அவர் மாமன்னன் படத்தின் ஒன்லைன் சொல்லும்போதே நன்றாக இருந்தது. அந்தக் கதையில் நடிப்புக்கு நிறைய வாய்ப்பிருந்தது. ஆனால், நகைச்சுவைக்கு வாய்ப்பில்லை. இந்த கதையின் மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜ். படத்தை தயாரித்து நடித்த உதயநிதி மன்னாதி மன்னனன். நான் ஒரு குறுநில மன்னன். தனக்கான வலியை மாரி செல்வராஜ் கச்சிதமாக கடத்தியுள்ளார்.

கொஞ்சம் பிசகினாலும் காமெடிதான்: ஒவ்வொரு காட்சியும் கொஞ்சம் பிசகினாலும் காமெடியாகிவிடும். என்னை சிரிக்கக் கூடாது என கன்டிஷன் போட்ட ஒரே படம் இந்தப் படம்தான். காமெடி வடிவேலுவுக்கும், சீரியஸ் வடிவேலு இடையே போராட்டம் நடந்தது. ஒரே மீட்டரில் நடித்தேன். படம் பார்த்துவிட்டு இரவு 11 மணிக்கு தமிழக முதல்வர் என்னை தொடர்பு கொண்டு பாராட்டினார்.

பத்து பிரமாதம்: வடிவேலு பிரமாதம்... பிரமாதம்... பிரமாதம்... என்றார். அவர் கூறிய பிரமாதத்தை எண்ணினேன். மொத்தம் பத்து பிரமாதம் சொன்னார். அதேபோல் ரஜினி பாராட்டினார். கமல் மேடையில் பாராட்டினார். படத்தில் நான் மட்டும்தான் ஹீரோ என்பது தவறானது. எல்லோரும் ஹீரோதான். குறிப்பாக மாரி செல்வராஜுக்குதான் அத்தனையும் பொருந்தும். அவரின் வயதுக்கு மீறிய படம் இது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X