மாமன்னன் படம் சும்மா நின்னு பேசுது... இரண்டு வாரத்தில் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: மாமன்னன் திரைப்படம் இரண்டாவது வாரத்தில் வசூலை அள்ளி நன்றாக கல்லாக்கட்டி வருகிறது.

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்

இந்தப்படத்தில் நடிகர் வடிவேலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

vadivelu starrer maamannan second week box office collection

மாமன்னன்: பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாமன்னன் திரைப்படம் ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் சாதிய வன்முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தேசியவிருது நிச்சயம்: உதயநிதி, கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். படத்தில் மாமன்னாக நடித்த வடிவேலு, மாமன்னன் படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார். சிறப்பாக நடித்த வடிவேலுவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என்ற பேச்சும் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது.

vadivelu starrer maamannan second week box office collection

மனதின் வலி : மாமன்னன் படத்தின் வெற்றியையொட்டி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டுபேசி வடிவேலு, 30 படத்தை எடுத்தது போன்ற அனுபவம் மாரி செல்வராஜிற்கு இருக்கிறது. அவர் வாழ்வில் போராடி வந்ததால், படத்தில் அந்த வலியை அப்படியே படத்தில் காட்டி உள்ளார். படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் எனக்கு போன் செய்து, அருமையாக நடித்து இருக்கீங்க என்று 10 முறை பிரமாதம் என்று சொன்னார் என்று சொன்னார்.

மகத்தான வசூல்: இந்நிலை மாமன்னன் திரைப்படம் வெளியாகி இன்றோடு சரியாக இரண்டு வாரம் ஆகி உள்ள நிலையில், படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் உலக அளவில் ரூ.62.58 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ரூ. 48 கோடியும், வெளிநாடுகளில் 13 கோடியும் வசூல் செய்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் கெரியரில் செய்திராத வசூல் சாதனையை மாமன்னன் படைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X