மதுரையில் மையம் கொண்ட 'வைகைப்புயல்'... சென்னை திரும்ப தயக்கம்?

சென்னை: நடிகர் வடிவேலு மதுரையிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை: படவாய்ப்புகள் இல்லாததால் மதுரையிலேயே தங்கி விட்டாராம் நடிகர் வடிவேலு.

இன்றளவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிகப்பெரிய ஆயுதமாக இருப்பது வடிவேலுவின் புகைப்படங்கள் மற்றும் டயலாக்குகள்தான். அந்தளவிற்கு அவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம்.

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஆளுமைகளில் அவரும் ஒருவர். ஒரு காலத்தில் இரவு பகல் பாராமல் அவர் நடிக்கும் அளவிற்கு பட வாய்ப்புகள் இருந்தது.

Vadivelu stays in Madurai for long time

இதனால் காமெடி நடிகராக இருந்தவர் இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். அப்படங்களும் அவருக்கு வெற்றியையே தந்தது.

ஆனால், அதே நிலைமை நீடிக்கவில்லை. அரசியல் காரணம், புதிய காமெடி நடிகர்களின் வருகை உள்ளிட்ட இன்னும் சில காரணங்களால் அவருக்கு புதிய படவாய்ப்புகள் இல்லை. ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த இம்சை அரசன் 24ம் புலிகேசி படமும் பாதியிலேயே நின்றது. அந்தப் பஞ்சாயத்தும் முடிந்தபாடில்லை.

Vadivelu stays in Madurai for long time

இதனால் சென்னையில் தங்கி இருப்பதை தவிர்த்து, தன் சொந்த ஊரான மதுரைக்கே வடிவேலு சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவைப்படும் போது மட்டும் இனி சென்னைக்கு வந்து போக அவர் முடிவு செய்துள்ளாராம்.

The Kollywood sources says that actor Vadivelu is staying longtime in Madurai itself.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X