Gangers Box Office: மாஸ் கம்பேக்கில் வடிவேலு.. சிரிப்புக்கு பஞ்சமில்லாத கேங்கர்ஸ் கலெக்‌ஷன் விபரம்

சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு, பக்ஸ் பகவதி பெருமாள், கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஷ்காந்த், மைம் கோபி, அருள்தாஸ், சந்தானபாரதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான கேங்கர்ஸ் படம் நேற்று அதாவது ஏப்ரல் 24ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை இயக்கியது மட்டும் இல்லாமல் நடித்தும் உள்ளார் சுந்தர் சி. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்தாலும், அவருக்கு என கம்பேக் படமாக எதுவும் அமையவில்லை. இவர் நடித்த மாமன்னன் படத்தில் வடிவேலு குணச்சித்திர கதாபாத்திரத்தில் மிகவும் இறுக்கமாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக வடிவேலுவுக்கு பாராட்டுகள் குவிந்தாலும், அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிற மாதிரியான காமெடி படத்தில் அவரால் ஹிட் கொடுக்க முடியாமல் இருந்தது. இந்த குறையை கேங்கர்ஸ் படம் நீக்கிவிட்டது எனக் கூறலாம்.

படம் நேற்று அதாவது ஏப்ரல் 24ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை முதல் நாளில் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக 15 ஆண்டுகளுக்குப் பின்னர் சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணியில் ஒரு படம் ரிலீஸ் ஆகியுள்ளது என்ற தகவலே ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்துவிட்டது. அப்படி எதிர்பார்ப்போடு வந்த ரசிகர்களுக்கு திருப்திகரமான படத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார்கள் சுந்தர் சி மற்றும் வடிவேலு.

Vadivelu Sundar C Comedy Movie Gangers First Day Box Office Collectoion Details

விமர்சனம்: படம் பார்த்தவர்களில் பெரும்பான்மையான ரசிகர்கள் கூறும் விமர்சனம் என்றால், இப்படியான வடிவேலுவை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். படத்தின் முதல் பாதி கொஞ்சம் டல் அடித்தாலும் இரண்டாம் பாதியில் படம் சூப்பர் டூப்பர் காமெடிகள் நிறைந்த பேக்கேஜாக படம் உள்ளது. குடும்பத்துடன் இந்த சம்மரில் பார்க்க தரமான படம் என கூறி வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் இந்த அளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளனர். குறிப்பாக வடிவேலு மற்றும் சுந்தர் சி ரொம்பவும் குஷியாக இருக்கிறார்கள்.

Vadivelu Sundar C Comedy Movie Gangers First Day Box Office Collectoion Details

வசூல்: படத்திற்கு ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை பலரும் நல்ல விமர்சனத்தைக் கொடுத்து வரும் நிலையில் இந்த வார வீக் எண்டில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக படம் இருக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது. இப்படியான நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பாக்ஸ் ஆபிஸ் தகவல்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கும் sacnilk வலைதளம், கேங்கர்ஸ் படம் முதல் நாளில் சுமார் 58 லட்சங்கள் வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்து கொண்டு இருப்பதால் இந்த வார விடுமுறைக்கு பின்னர் படத்தின் மொத்த வசூல் கோடிகளில் இருக்கும் என படக்குழு எதிர்பார்க்கிறது.

ப்ளூ சட்டை மாறன்: படத்திற்கு ரசிகர்கள் தொடங்கி பல விமர்சகர்களும் பாசிடிவான விமர்சனம் கொடுத்தாலும் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படத்தை போட்டு தாக்கு தாக்கு என தாக்கியுள்ளார். இன்னும் சொல்லப்போனால், தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கும் இந்த படம் அவருக்கு சிரிப்பைத் தரவில்லையாம். மாறாக வடிவேலுவை நினைத்து வேதனைப் படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X