மீண்டும் இணையும் தெனாலிராமன் டீம்!

By Shankar

3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி வெளியானது தெனாலிராமன்.

படம் ஹிட்டா இல்லையா என்பது ஒருபக்கம்... ஆனால் தயாரிப்பாளருக்கு 'துட்டு' வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். சென்னையில் மட்டுமல்ல, வெளியூர்களில் கூட இன்னமும் ஓரளவு கூட்டத்துடன் இந்தப் படம் ஓடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஜில்லா, வீரம் வழியில் இல்லாமல், கொஞ்சம் தம்கட்டி 50 நாள் வரை இந்தப் படம் போகும் என்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம்.

Vadivelu to team up with Yuvaraj again

தனக்கு கிடைத்துள்ள ஓபனிங்கைப் பார்த்து மகிழ்ந்துபோன வடிவேலு, மீண்டும் ஹீரோவாக இரு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

அதில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளனுக்கே தந்திருக்கிறார். மற்றொரு படத்தை பிறகு அறிவிக்கப் போகிறாராம்.

இதற்கிடையில் ரஜினியின் லிங்கா படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

வடிவேலுவை வைத்து யுவராஜ் இயக்கவிருக்கும் அடுத்த படமும் வரலாற்றுப் படம்தானாம். கொஞ்சம் நவீன வரலாறு. 18-ம் நூற்றாண்டுக் கதையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X