twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெ. முன்னிலையில் 'கருப்பு எம்ஜிஆர்' என்று விஜய்காந்த் கூறமுடியுமா?-வடிவேலு

    By Chakra
    |

    Vadivelu
    நத்தம்: ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் பேசப் போகும் விஜய்காந்த், தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று கூற முடியுமா என்று நடிகர் வடிவேலு சவால் விட்டுள்ளார்.

    திமுக வேட்பாளர்களை ஆதரித்து மதுரை நத்தம் தொகுதியில் பிரச்சாரம் செய்து பேசிய அவர் கூறுகையில்,,

    தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று கூறிவரும் விஜயகாந்த், ஜெயலலிதா முன்னிலையில் தான் இன்னொரு எம்ஜிஆர் என்று கூறமுடியுமா?. இன்று கோவையில் நடக்கும் கூட்டத்தில் இருவரும் ஒரே மேடையில் பேசப் போவதாக சொல்கிறார்கள்.

    அப்போது, நீ ஒரு சரியான ஆம்பிளையா இருந்தா, இன்று அந்த மேடையில் கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லு. அப்புறம் அந்த அம்மாதான் முதல் அமைச்சர் என்றால், எப்பவுமே அந்த அம்மாதான் முதல் அமைச்சர் என்று சொல்லு, பார்ப்போம்.

    நீ சொல்ல மாட்ட. ஏன் என்றால் அதிமுகவை நீ 'ஆட்டைய போட' நினைக்கிற என்றார்.

    விஜயகாந்த் மீது நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு:

    இந் நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்,

    ஒரு 'புல்' அடித்தால்தான் பாதியாவது பேச வரும் என்ற நிலையில் இருக்கும் விஜயகாந்த், ஒரு இயக்கத்தை வழி நடத்தவோ, நாட்டை வழி நடத்தவோ தகுதி அற்றவர். கட்சித் தலைவராக இருக்க விஜயகாந்த்துக்கு தகுதி இல்லை. அவரது நடவடிக்கைகள் மூலம் நாட்டு மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதனை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்.

    வைகோ கருப்பு துண்டு போட்டதால் அவரை கூட்டணியில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜெயலலிதாவிடம் சொல்லிருக்கிறார்கள் என்று செய்தி வருகிறது. கருப்பு ஜெயலலிதாவுக்கு ஒத்துக் கொள்ளாது என்றால் விஜயகாந்த் என்ன சிவப்பா?.

    அதிமுக அணியில் இருந்து எங்களை திட்டமிட்டு வெளியேற்றியவர்களுக்கு மதிமுகவினர் பதிலடி கொடுப்பார்கள். யாரை வீழ்த்த வேண்டும் என்பதில் எங்கள் தோழர்கள் தெளிவாக இருப்பார்கள். எங்களை இழந்ததால் யாருக்காவது இழப்பு ஏற்பட்டே தீரும் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும். யாரை வீழ்த்த வேண்டும் என்று மதிமுகவினருக்கு தெரியும். மனசாட்சிப்படி மதிமுகவினர் வாக்களிப்பார்கள் என்றார்.

    English summary
    Actor Vadivelu has asked whether DMDK leader Vijayakanth can call himself as black MGR in front of Jayalalitha. He has accused Vijayakanth of scheming to take over ADMK.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X