கம் பேக் கொடுக்க போகிறாரா வடிவேலு? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நாயகனாக வலம் வந்தவர் வைகைபுயல் வடிவேலு.
பல படங்களில் நடித்து, இன்றளவும் வடிவேலுவின் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றன.
நீண்ட காலமாக திரையில் நடிக்காமல் இருக்கும் வடிவேலு தற்போது மீண்டும் கம் பேக் கொடுக்க உள்ளதாக தெரிகிறது.

வடிவேலு பேச்சு
சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வடிவேலு, தான் 10 வருடமாக லாக் டவுனில் இருப்பதாகவும், நடிக்க ஆசை இருந்தும், உடலில் தெம்பு இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது என கூறியும், வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற பாடலை பாடியும் கண்கலங்கினார்.

சொந்த தயாரிப்பு
சில மாதங்களுக்கு முன் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நடிகை மீரா மிதுன், வடிவேலுவின் பேட்டியை குறித்து பேசியுள்ளார். மீரா மிதுன், நீங்கள் பெரிய சகாப்தம். கண்கலங்க கூடாது. நான் சொந்தமாக படம் தயாரிக்கிறேன், விருப்பம் இருந்தால் நடியுங்கள் என கூறியுள்ளார்.

மூன்றாம் முறை கூட்டணி
இதைத்தொடர்ந்து வடிவேலு இயக்குனர் திருமுருகன் இயக்கும் படத்தில் R.J. பாலாஜி உடன் இணைந்து நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன் திருமுருகன் இயக்கத்தில் எம்டன் மகன், முனியாண்டி ஆகிய படங்களில் வடிவேலு நடித்துள்ளார்.

சூர்யாவுடன் இணைந்து
அதுமட்டுமின்றி பாண்டிராஜ் இயக்கத்தில் வடிவேலு சூர்யாவுடன் 5ம் முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











