வடிவேலு எடுத்திருக்கும் அவதாரம்.. மீண்டும் வண்டு முருகன் வருகிறாரா?.. அட சூப்பரா இருக்குமே
சென்னை: வைகை புயல் வடிவேலு இப்போது திரைத்துறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கிறார். இந்த முறை காமெடி ரோல்கள் மட்டுமில்லாமல் அதற்கு சமமாக கேரக்டர் ரோல்களையும் ஏற்று நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதுவும் பெரிய ரெஸ்பான்ஸை பெறுகின்றன. கடைசியாக அவர் மாரீசன் படத்தில்கூட நடிப்பில் அசத்தியிருந்தார். இந்நிலையில் அவரது புதிய படம் பற்றியும்; அதில் அவர் ஏற்கவிருக்கும் ரோல் குறித்தும் புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
வடிவேலு கோலிவுட்டில் ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கும் விஜயகாந்த்துக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. அதனையடுத்து கேப்டனை தாக்கி பேச வேண்டுமென்பதற்காக 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக மேடைகளில் ஏறி பேச ஆரம்பித்தார். தரை லோக்கலுக்கு இறங்கி ரொம்பவே பேசினார் வைகை புயல். ஆனால் அதற்கு விஜயகாந்த் திருப்பி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. அப்போது தான் பேசியதை நினைத்து இப்போதும் வருத்தப்படுகிறார் வடிவேலு. அவரது இறப்புக்குக்கூட செல்ல முடியாத சூழ்நிலை உருவானது.

மீண்டும் ஆரம்பித்த வடிவேலு: இதற்கிடையே விஜயகாந்த்தை எதிர்த்து பேசினாலும்; அந்த வருடம் அதிமுக - தேமுதிக கூட்டணிதான் வென்றது. அதனைத் தொடர்ந்து வடிவேலுவுக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து ஒருகட்டத்துக்கு மேல் இல்லாமலேயே போய்விட்டது. ஒருவழியாக சில வருடங்களில் நிலைமை எல்லாம் சரியாகி மீண்டும் நடிக்க வந்தார் அவர். அதன்படி முதலில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 படங்களில் காமெடி ரோல்கள் ஏற்றார். அது ஒர்க் அவுட் ஆகவில்லை. ரூட்டை மாற்றி கேரக்டர் ரோல்களை ஏற்றார். அப்படி அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
சூப்பர் பெயர்: அதனையடுத்து ஃபகத் பாசிலுடன் மாரீசன் படத்தில் நடித்தார். மறதி நோயாளியாக நடித்தார் என்பதைவிடவும் வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அந்த கேரக்டரோடு ஒன்றிப்போய்விட்டார். நிச்சயம் மாமன்னன், மாரீசன் ஆகிய படங்கள் அவரது திரைத்துரையில் மைல்கற்கள்தான். ஏற்கனவே குணசித்திர கேரக்டர்களில் கலக்கியிருந்தாலும் இந்த இரண்டு படங்களும் இந்த காலத்தில் வந்து ஸ்பெஷலாக மாற்றியிருக்கின்றன. ஜென் ஸி தலைமுறையினரிடமும் வடிவேலு சிறந்த குணசித்திர நடிகர் என பதிந்துவிட்டார்.
அடுத்த படங்கள்: முழுக்க முழுக்க கேரக்டர் ரோல்களிலேயே செல்லாமல் காமெடி வேடங்களுக்கும் ஓகே சொல்கிறார்தான். சக்சஸ்ஃபுல் இயக்குநரான சுந்தர்.சி இயக்கத்தில் கேங்கர்ஸ் படத்திலும் அப்படித்தான் நடித்தார். ஆனால் அது முழுக்க ஒர்க் அவுட் ஆகவில்லை. அடுத்ததாக பிரபுதேவாவுடன் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். படத்தின் க்ளிம்ப்ஸ் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதிலும் காமெடி ரோல்தான் ஏற்றிருக்கிறார். இந்நிலையில் அவரது புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
என்ன தகவல்?: அதாவது அவர் பினில் இயக்கத்தில் போர்முழக்கம் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறாராம் இதனை லாலு மற்றும் டோனா தாமஸ் தயாரிக்கிறார்கள். இதில் வடிவேலு வக்கீல் வேடத்தை ஏற்றிருக்கிறாராம். ஏற்கனவே லண்டன் படத்திலும், எல்லாம் அவன் செயல் படத்திலும் வழக்கறிஞர் கேரக்டரை ஏற்றிருந்தார். அவை பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் வக்கீல் வேடம் ஏற்றிருப்பதால் இதுவும் அதேபோன்ற வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











